ஆரோக்கியம் ஆன்மீகம் பொது மருத்துவம்

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன?

🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். அவர்களின் ஆசி கூடுதல் சிறப்பு என்று கூறுவார்கள்.

காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

🙇காலைத் தொட்டு வணங்குவதில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு.

🙇கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம்.

🙇 பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே முழு மூலக்காரணமாக இருந்தவர்கள் அவர்கள் தான் என்பதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாதத்தை தொட்டு வணங்குகிறோம்.

🙇 பெரியோர்கள், வயதானவர்களின் காலில் விழுந்து ஆசி பெறும் போது நம்மிடம் சக்தி அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆசீர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.

🙇 நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை பயன்படுத்தி கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் காலில் விழும் பழக்கம்.

🙇 ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது, அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுகிறோம் எனில், அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது.

🙇 மேலும் ஆசி வழங்கும் போது சொல்லும் வார்த்தைகளில் அதிக சக்தி இருக்கிறது. மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும் போது அதன் சக்தி அளவிட முடியாதது. பல பாவங்களையும், தோஷங்களையும் கூட அது போக்குகிறது என்பது நம்பிக்கை.

🙇 கோவிலுக்கு சென்றால் தரையில் விழுந்து கடவுளை சாஷ்டாங்க நமஸ்காரம் செய் என்று சொல்வார்கள். அது ஏன்? என்று நீங்கள் யோசித்தது உண்டா?

🙇 கோவிலில் கடவுள், சக்தி ரூபமாக விளங்குகிறார். அங்கிருக்கும் சக்தியை பெற்று கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் நமது மனமும், உடலும், அறிவும் சரிவர ஒத்துழைக்காததே இதற்கு காரணம்.

🙇 மனக்குழப்பத்தில் இருக்கும் போது தான் அதிகப்படியானோர் கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு மனம் குழப்பத்தில் இருக்கும் போது, மனமும், அறிவும் நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் பெறும் தன்மையை இழக்கிறது.

🙇 அவ்வாறு, ஏற்கும் தன்மை இல்லாதபட்சத்தில் உங்கள் உடலுக்கும், கோவிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும். அதாவது, கோவிலின் தரையில் அமர வேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

🙇 ஆண்கள் என்றால் தங்கள் உடல் தரையில் படும்படியாக வணங்க வேண்டும்.

🙇 பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அதாவது தலை, கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்.

🙇 இவ்வாறு வணங்குவதன் மூலம் நமது உடல் வழியாக கோவிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலும், சக்தியும் நம் உடலுக்குள் சென்றுவிடும்.

🙇 ஆசீர்வாதம் பெறுவது மட்டுமல்ல. ஆசீர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும். நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில் தான் விஷயம் இருக்கிறது.

என்ன சொல்லி வாழ்த்த வேண்டும்?

🙌 நம்மிடம் ஒருவர் ஆசி கேட்கும் போது மனப்பூர்வமாக எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்தலாம்.

🙌 பெண்களுக்கு – (தீர்க்க சுமங்கலி பவ) தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.

🙌 ஆண்களுக்கு – (தீர்க்காயுஷ்மான் பவ) நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தலாம்.

🙌 மணமக்களுக்கு – பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தலாம்.

🙌 இப்படிப்பட்ட நல்ல வார்த்தைகளை கூறும் போதும், கேட்கும் போதும் சக்தி அதிகரித்து, நல்லதே நடக்கும். பெரியோர்களிடம் ஆசி பெற்றே மார்க்கண்டேயன், ஆஞ்சநேயர் போன்றோர் இன்னும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

Recent posts

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

சிலுவைகளைச் சுமக்கும்போது நீர் என்னோடு இருப்பீராக.

சிலுவைப்பாதை – 14 நிலைகள்** (Siluvaippadhai – 14 Nilaigal) அறிமுகம் சிலுவைப்பாதை என்பது இயேசு கிறிஸ்து தனது சிலுவையைச் சுமந்து, கொல்கொதா மலைக்குச் சென்ற பாதையில்...
Thamil Paarvai

ரோமன் கத்தோலிக்க பாஸ்கா திருவிழிப்பு

கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஆண்டில் மிக உயர்ந்ததும், மிக முக்கியமானதுமான கொண்டாட்டம் பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) ஆகும். இது இயேசு கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்த நிகழ்வை மையமாகக்...
Thamil Paarvai

புதிய வழியில் அழைக்கிறார்.

தவக்காலம்: நாள் 1 (சாம்பல் புதன்) – கதை “சாம்பலும், புதிய தொடக்கமும்” பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் அந்தோணி என்ற பெயரில் ஒரு...
Thamil Paarvai

🌿 ஒரு புதிய ஆன்மீக பயணத்திற்கான தொடக்கம் 🌿

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நமக்கு தியாகம், கருணை, மன்னிப்பு, மற்றும் புதிய தொடக்கத்தை கற்றுக்கொடுக்கிறது. விபுதி புதன் (Ash Wednesday) என்பது அந்த ஆன்மீகப் பயணத்தின் முதல்...
Thamil Paarvai

செல்வங்கள் பெருக… 

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

ஞாயிறு ஏன் வாரத்தின் முதல் நாளாக உள்ளது தெரியுமா?…

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளை செய்யவேண்டும். மனிதர்கள் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

Leave a Comment