Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் (28) முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது (இது ஜூலை மாதத்திற்குப் பின்னரான அதிகபட்ச விலையாகும்).

நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், விலை 100 டொலர்களைத் தாண்டலாம் என வர்த்தக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், OPEC+ அமைப்பு இன்று (01) கூடி, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 137,000 பீப்பாய்களுக்குப் பதிலாக, நாளொன்றுக்கு 411,000 பீப்பாய்கள் அல்லது அதற்கும் மேலாக உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

சவுதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.

விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே உற்பத்தியை அதிகரித்துள்ளன.

ஏனைய நாடுகளிடம் இதற்கான உபரித் திறன் இல்லாமை பெரும் சவாலாக இருந்தபோதிலும், நெருக்கடிக்கு மத்தியில் OPEC+ உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent posts

சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்..

சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த...
Thamil Paarvai

போர்க்கப்பலுக்கு வைக்கப்பட்ட குறி!

ஈரானின் புரட்சிகர காவல்படை, அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Abraham Lincoln போர்க்கப்பலை வளைகுடாவில் தாக்கியதாக அறிவித்துள்ளது.  அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நாட்டின் உயர்மட்ட...
Thamil Paarvai

புற்றுநோய் ஆராய்ச்சியில் சாதனை படைத்த கனடா தமிழ் பெண்!

புற்றுநோயால் தன் குடும்ப உறுப்பினர்களை இழந்த வலியை, பெரும் சாதனையாக மாற்றியுள்ளார். இவரது தாத்தா மற்றும் நான்கு அத்தைகள், மாமாக்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரமான தனிப்பட்ட...
Thamil Paarvai

சர்வதேச உளவுத் துறைகள் அலறுகின்றன.

வீழ்ந்த சிம்ம சொப்பனம் கமேனி.. ஈரான் கையில் உள்ள அந்த ‘டர்ட்டி பாம்’.. இனி நடக்க போகும் பேரழிவு! எங்கள் தலைவரைத் தொட்டுவிட்டீர்கள்… இனி உங்கள் நகரங்களில்...
Thamil Paarvai

வீழ்ந்த சிம்ம சொப்பனம் ஆயத்துல்லா அலி காமனெய்

ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் அதன் பின்னணியிலான தனித்துவமான செய்திகள் வருமாறு:...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

Leave a Comment