இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொருளாதார மறுமலர்ச்சி , கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அரசியல் பணியக உறுப்பினரும், இராஜதந்திரியுமான யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரின் தலைவர் வங் சியாடாஓ மற்றும் சீன வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ச்செங் சொங்டோ ஆகியோரை உள்ளடக்கிய சீனத் தூதுக்குழுவினரின் இலங்கைக்கான விஜயத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (9/10) வெளிநாட்டு அமைச்சு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் முன்னிலையில் கடந்த அக்டோபர் 9 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இந்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுகையில், இலங்கையில் 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியிலான சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களின் ஆக்கபூர்வமான வகிபாகம் மற்றும் குறித்த திட்டங்களினால் இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புக்கள் குறித்து தலைவர்கள் நினைவு கூர்ந்தனர். பாரியளவிலான இந்த அந்நிய நேரடி முதலீடுகளின் முழுமையான திறனிலிருந்து நாட்டில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்களை முன்கூட்டியே நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை தூதுக்குழுவினரும், அரசாங்கமும் குறிப்பாக சுட்டிக் காட்டின.

கோவிட் தொற்றுநோய் நிலைமையின் போது சீன அரசாங்கம் அளித்த மகத்தான ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சீன அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற மதிப்புமிக்க உதவி மற்றும் ஆதரவுகளுக்காக தூதுக்குழுவிரிடம் தனது நன்றிகளைத் தெரிவித்தார். வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காகவும், மனித உரிமைகள் பேரவையில் விசாரணை நேரங்களின் போதான சீனாவின் உறுதியான ஆதரவிற்காகவும் தலைவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

இரு வழி வர்த்தகத்தை மீளாய்வு செய்கையில், வர்த்தக வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், சீனாவுக்கு ஆதரவான வர்த்தக சமநிலையை மேம்படுத்துவதற்காகவும், சீன உள்நாட்டு சந்தையில் கேள்வி நிலவக்கூடிய இலங்கையின் சில தனித்துவமான பொருட்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குமாறு சீனத் தலைவர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்தது. வர்த்தக அளவை அதிகரிப்பதற்காக சீனாவிற்கான ஏற்றுமதி நிலைமை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை – சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஸ்தம்பிதமடைந்துள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

கோவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது சீனத் தலைவர்களால் கொழும்புக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முதலாவது விஜயமானது, சுகாதார அமைச்சின் காற்றுக் குமிழி (Air-Bubble) எண்ணக்கருவின் அடிப்படையிலான கண்டிப்பான சுகாதார நெறிமுறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 09 அக்டோபர் 2020

Recent posts

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

“சீற்றம், அதிர்ச்சி, திகைப்பு”: ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என டிரம்ப் பெயர் மாற்றியதற்கு அரசியல் தலைவர்களின் பதில்

“ஏரியின் பெயர் வென்டாட் மொழியில் ‘ஒன்டாரியோ’ என்பதிலிருந்து வந்தது. அந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலானது, கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்திற்கு முந்தையது.” –...
Thamil Paarvai

கனடா மீதான டிரம்பின் புதிய வரிகள்: சட்டரீதியான சவால்களை சந்திக்குமா?

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய 50 சதவீத சுங்கவரியை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தியுள்ள 96 ஆண்டுகள் பழமையான சட்டம், சட்டரீதியான...
Thamil Paarvai

வெள்ளமா? மலையே உடைந்து விழுந்ததா? நேபாள பேரழிவு

“உள்நாட்டு சுனாமி போன்றது” – நேபாளத்தை தாக்கிய பேரழிவை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவை. வெள்ளமா, மலை உடைந்து விழுந்ததா என்ற கேள்விக்கு பதில் இரண்டுமே. ஆனால்...
Thamil Paarvai

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம்.

வர்த்தகப் போர்: கனடா – அமெரிக்கா உறவின் புதிய அத்தியாயம் “நாம் தாக்கப்பட்டபோது, நாம் போரில் இருக்கிறோம்” – இந்தக் கடுமையான வார்த்தைகளுடன், கனடாவின் பிரதமர் மார்க்...
Thamil Paarvai

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

Leave a Comment