ஆரோக்கியம் பொது மருத்துவம்

உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

மழைக்காலம்… இந்தக் காலங்களில் குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர்கள் என அனைத்து தரப்பினரையும் நோய் ஒருபாடு படுத்திவிடும்.

சளியில் ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு நோயானது, கவனமின்மையாலும் அலட்சியத்தாலும் இறுதியில் அதிகப்படியான காய்ச்சலுக்கு வித்திட்டு விடும் அபாயம் இருக்கிறது.

ஆகையால் கொஞ்சம் சமயோஜித புத்தியுடன் இந்த மழைக்காலத்தை நாம் கையாள வேண்டி இருக்கிறது. அவை பற்றி இங்கு காண்போம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் :

குழந்தைகளுக்கு சளியோ அல்லது இருமலோ ஏற்படுமாயின், சுடு தண்ணீர் கொடுப்பதில் தொடங்கி அதிக நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை கொடுப்பது என படிப்படியாகத்தான் மருந்துகளை அணுக வேண்டும்.

மிகச் சிறிய குழந்தைகளாய் இருப்பின், தாய்ப்பாலுடன் உறை மாத்திரையை கலந்து கொடுக்கலாம்.

 சிறுவர் சிறுமியராக இருப்பின் அவர்களுக்கு உணவில் தூதுவளைச் சட்னி, கற்பூரவல்லி சட்னி, கொள்ளு சுண்டல், கொள்ளு சட்னி, கொள்ளு ரசம் உள்ளிட்ட உணவுகளை கொடுக்கலாம்.

இது தவிர்த்து அதிகமான கீரைகள் மற்றும் காய்கறிகளை பகல் உணவின்போது எடுத்துக்கொள்ளலாம்.

முதியோர்கள் மற்றும் நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வோர் சித்த மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் சில மருந்துகளை எடுத்துக்கொண்டு உடலை பராமரித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல், இருமல் பிரச்னை உள்ளவர்கள் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

குறிப்பாக இரவில் கீரை சாப்பிடுவது, குளிர்ச்சியான காற்றில் அதிக நேரம் இருப்பது முதலியவற்றைத் தவிர்க்கலாம். குளிர் நீரில் குளிப்பதைத் தவிர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.

கூடுமானவரை குளிர்சாதன அறையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இந்தக் காலங்களில் முதியோர்கள் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நடுத்தர வயதினர் கவனத்தில் கொள்ள வேண்டிவை :

துரிதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சாப்பிடும் உணவுடன் இணைத்து ஐஸ்கீரிமை எடுத்துக்கொள்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

கூடுமானவரை இரவு நேரங்களில் அதிகமான உணவை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதுடன், சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்வது மிக முக்கியமானது.

வாரத்திற்கு இரு முறை ஆவிப்பிடிக்கலாம். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் மஞ்சள், மிளகு மற்றும் பால் கலந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.

குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்து, உடலுக்கு வெப்பம் கொடுக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் மோர் குடிக்கலாம். மனநல ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மோர் முக்கியப்பங்கு வகிக்கும்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment