ஆன்மீகம் கிறிஸ்தவம்

ஒரு வார்த்தை போதும்

ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். இயேசுவை நோக்கி… “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

Recent posts

பழைய ஏற்பாட்டின் அடிப்படைச் நம்பிக்கைகள்

1. மோசேயின் பிறப்பும் அழைப்பும் யோசேப்பு மரித்தபின்பு, அவருடைய சந்ததியினரான இஸ்ரவேலர் எகிப்தில் பெருகினர். புதிய பார்வோன் இஸ்ரவேலரைப் பார்த்துப் பயந்து, அவர்களை அடிமைகளாக்கி, கடின வேலைகளைச்...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

விண்ணைத் தொடும் விரல்கள்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இறையியல் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுவது ஜெபமாலை (Rosary) ஆகும். இது வெறும் கோர்வையான மணிகள் அல்ல; இது ஒரு ஆன்மீக ஆயுதம்,...
Thamil Paarvai

விண்ணின் விருந்து, மண்ணின் பலி

கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டின் மையமும் உச்சியுமாக விளங்குவது திருப்பலி (Holy Mass) ஆகும். இது வெறும் ஒரு சடங்கு அல்ல; இது கல்வாரியின் பலி மீண்டும் நிகழ்த்தப்படும்...
Thamil Paarvai

இரத்தத்தால் எழுதப்பட்ட வெற்றி

“மறைசாட்சி” என்ற சொல்லைக் கேட்டவுடன், நம்முள் ஒரு பயமும், அதே நேரத்தில் ஒரு பிரமிப்பும் உண்டாகிறது. ஒருவர் தனது உயிரையே இழக்கத் தயாராக இருக்கிறார் – எதற்காக?...
Thamil Paarvai

திருச்சபையின் அறிவுக் கதவுகள்

விசுவாசம் மட்டும் போதுமா? இறைவனை நேசிப்பது மட்டும் போதுமா? ஆம், போதும். ஆனால் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அறிவு, பகுத்தறிவு, தர்க்கம் – இவற்றைப் பயன்படுத்தி, விசுவாசத்தை...
Thamil Paarvai

வயது ஒரு தடையல்ல, இதயம்தான்

“நான் இன்னும் சிறு குழந்தை. என்னால் பெரிய காரியங்கள் செய்ய முடியாது.” – இப்படி நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஏனெனில், திருச்சபையின் வரலாற்றில், 7...
Thamil Paarvai

குடும்பம் என்பது ஒரு மடம்

நாம் பெரும்பாலும் புனிதர்கள் என்றால், கன்னியாஸ்திரிகள், துறவிகள், குருக்கள், மறைசாட்சிகள் – இவர்களைத்தான் நினைத்துக் கொள்கிறோம். “ஒரு சாதாரண அப்பா, ஒரு சாதாரண அம்மா – குழந்தைகளைப்...
Thamil Paarvai

விண்ணின் விரல் பூமியில்

“அதிசயம்” (Miracle) என்ற சொல்லைக் கேட்டவுடன், பலருக்கு ஒரு சந்தேகம்: “இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? விஞ்ஞானம் இவற்றை எப்படிப் பார்க்கிறது? இன்றும் அதிசயங்கள் நிகழ்கின்றனவா?” கத்தோலிக்க...
Thamil Paarvai

Leave a Comment