Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜெர்சி தீவுக்கு விரையும் பிரான்ஸ் போர்க்கப்பல்கள். அதிகரிக்கும் பதட்டம்.

ஜெர்சி தீவில் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு இடையில் உள்ள சேனல் தீவுகளில் ஜெர்சி தீவு மிகப்பெரியது. அங்கு பிரித்தானியா ஆதரவுடன் சுய ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தீவில் மீன்பிடிக்க வரும் பிரான்ஸ் மீனவர்களுக்கு ஜெர்சி அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பிரான்ஸ் அரசு கடும் கண்டனங்கள் தெரிவித்தது, அதுமட்டுமின்றி மின்சாரத்தை துண்டிப்போம் என என எச்சரிக்கையும் விடுத்தது.

இதனிடையே, ஜெர்சி தீவின் முதலமைச்சருடன் உரையாடிய பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அவர்களுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பதட்டங்களை உடனடியாக குறைக்க வேண்டும் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஜெர்சி தீவின் முதல்வர் Senator John Le Fondre-வும் வலியுறுத்தினர் எனவும், மீன்பிடி உரிமம் தொடர்பில் ஜெர்சி மற்றும் பிரான்சுக்கு இடையில் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என பிரித்தானியா பிரதமர் அலுவகத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரெக்ஸிட் பிந்தைய மீன்பிடி உரிமைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 60 பிரான்ஸ் மீன்பிடி படகுகள் இன்று காலை ஜெர்சி தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள முக்கிய துரைமுகம் அருகே கூடியுள்ளது.

பிரான்ஸ் மீனவர்களின் போராட்டத்தால் கடல் போக்குவரத்து தடைப்படும் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைமையை கண்காணிக்க ஜெர்சி தீவு அரசாங்கத்தின அனுமதியுடன் பிரித்தானியா இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் இரண்டு இரண்டு போர்க்கப்பல்களை ஜெர்சி தீவுக்கு அனுப்பியுள்ளது.  பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்சும்   போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

Recent posts

பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள்

தமிழ்நாடு தேர்தல் 2026: 58 ஆண்டுகால திமுக-அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – ஒரு முழுமையான ஆய்வு பாரம்பரிய அரசியலுக்கு விடை கொடுத்த தமிழக வாக்காளர்கள் சென்னை, மே...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

ஒட்டாவா வெள்ள அபாய எச்சரிக்கை

ஒட்டாவா ஆற்றில் இன்று நீர் மட்டம் நிலைபெறக்கூடும். ஒட்டாவா மற்றும் கேட்டினோவில் வெள்ளம் குறித்த சமீபத்திய தகவல்கள் இதோ. ஒட்டாவா, கேட்டினோ மற்றும் கிழக்கு ஒன்ராறியோ முழுவதும்...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

Leave a Comment