அழகு ஆரோக்கியம் இயற்கை அழகு டிப்ஸ்

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை.

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் சத்தான உணவுகளையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களையும் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் கடைகளில் விற்கும் குளிர்பானங்களையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்களையும் மட்டுமே தேடி தேடி உண்கிறார்கள். எனவே காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய இயற்கை பானங்களைப் பற்றி இங்கு காண்போம்.

தண்ணீர் :

👉 தினந்தோறும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்திற்குள், ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை குடிக்க வேண்டும்.

👉 ஏனெனில் தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ச்சியாக தண்ணீர் குடித்து வருவதால் சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் குறைக்க முடியும்.

நெல்லிக்காய்ச் சாறு :

👉 வெறும் வயிற்றில் தினந்தோறும் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

👉 மேலும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் இது மிகவும் சிறந்தது.

வெந்தயத் தண்ணீர் :

👉 முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

👉 வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை உண்டாக்கி விடும்.

வெள்ளை பூசணி சாறு:

👉 தொப்பை மற்றும் ஊளைச்சதையை விரைவில் குறைக்க, வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்துவர வேண்டும். மேலும், இதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.

👉 இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்ப்பது நல்லது.

அருகம்புல் சாறு :

👉 வெறும் வயிற்றில் அருகம்புல் சாறினை அருந்துவதன் மூலம் அல்சரை தடுக்கலாம். அருகம்புல்லின் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டுள்ளதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment