சிறுகதை சிறுவர் பக்கம்

அறிஞர் எப்படி குரங்காக மாறினார் …

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தான் எழுதுவதற்காக தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரை குரங்காக மாற்றிவிட்டார்.

அவர் குரங்காக இருந்த போது ஒரு செய்தி பரவி வந்தது. அரசருக்கு ஒரு ஆலோசகர் தேவைப்படுகிறார் என்று. இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். ‘இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

எனவே அரசர் அந்த குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். பின்னர் அரசர் குரங்கை மந்திரத்தால் மனிதனாக மாற்றினார். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

The king and the scholar…!!

A scholar was looking for a quiet place to write a research paper. Without knowingly, he had chosen the valley to write where the demons live. An angry demon turned him into a monkey.

When he was a monkey, a news was spread over. That the king needs an advisor. Those who want this post can write any message appropriately. It was also be announced that the best author would be selected as an advisor.

The scholar also wrote the message. The king′s servants and others laughed. “Look at the fun here. This monkey is going to be an advisor to the king!” and made fun of that. Finally, all the news was carried to the king. The king read everything. The message of that monkey was very good.

So, the king appointed the monkey as his chief adviser. Then the king changes the monkey as the real person by magic. The scholar has reached his old position.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment