சிறுகதை சிறுவர் பக்கம்

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் ஒருவன், ‘நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்!” என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அவன் குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குச் சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.

குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்றவர்கள், அவனின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவன் கோடாரியை விட்டுச் சென்றதற்கு ஏதேனும் முக்கியமான காரணம் இருக்கும் என்று மற்றவர்கள் நினைத்தனர். அதனால், எல்லாரும் தங்கள் கையில் எடுத்து வந்திருந்த கோடாரியை அப்படியே போட்டுவிட்டுத் தொடர்ந்து சென்றனர். காட்டுக்குச் சென்று வெட்டுவதற்கு ஏற்ற மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், யார் கையிலும் கோடாரி இல்லையே, பிறகு எப்படி மரம் வெட்டுவது? எல்லாரும் ஒன்றாக அமர்ந்து தங்கள் முட்டாள்தனத்தை எண்ணி வெட்கப்பட்டனர்.

கதையின் கருத்து : நீங்கள் செயல்படும் முன் சிந்தியுங்கள்.

Great Foolish..

Once upon a time people living in a country thought they were the greatest intellectuals in the world. But they do not know that they are all exact fools.

One day they decided to build a large house of wood. They decided to go to the forest to pick the best tree for it. At that time, one of them said, “I′m going in a horse-drawn carriage first. You are all come back!” Everyone accepted it. He rode his horse and went to the forest. But on the way, his pony fell on a stone. The ax in his hand went away and fell. He too had fallen into a deep pit.

Others, who followed the horse-drawn carriage, saw his axe lying in the way. Others thought there might be some important reason why he left the axe. So they all put away the axe they had taken in their hands. They went to the forest and selected a suitable tree for cutting. But who doesn′t have an axe in hand? They all sat together and were ashamed of their stupidity.

Moral of ther story : Think before you act.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment