கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டியில் இன்று முதலாவதாக மோதும் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள்!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர், அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்குகின்றனர்.

இப்போட்டியில் இரு அணி வீரர்;களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டிக்காக தற்போது வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ரோஹிர் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் டோனி, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ந் ஆகிய துடுப்பாட்ட வீரரகள் உள்ளனர்.

பந்து வீச்சில் பும்ரா, மொஹமட் ஷமி, சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். சகலதுறை வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியில், உஸ்மான் கவாஜா, ஷோன் மார்ஷ், ஆர்ஸி ஷோர்ட் பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.

பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல், நாதன் லியோன், ஆடம் செம்பா, ஜெய் ரிச்சர்டசன், ஹெண்ட்ரூ டை ஆகியோர் உள்ளனர்.

இப்போட்டியில், பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் ஹைதராபாத் – ராஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தை பொறுத்தவரை இம்மைதானத்தில் 286 ஓட்டங்களே முதல் இன்னிங்ஸிற்காக அதிகபட்ச ஓட்டமாக பெறப்பட்டுள்ளது.

சேஸிங் ஓட்ட எண்ணிக்கையாக 252 ஓட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல இரு அணிகளும் இதுவரை 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா அணி 47 போட்டிகளிலும்இ அவுஸ்ரேலியா அணி 73 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவற்காக இந்தியா சென்றுள்ள அவுஸ்ரேலியா அணி, முதலில் நடைபெற்ற ரி-20 தொடரை முழுமையான வெற்றிக்கொண்டு சரித்திரம் படைத்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டே ஆக வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அத்தோடு சொந்த மண்ணில் பெற்ற அவமான தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்பதில் அவுஸ்ரேலியாவும் தீவிரமாகவுள்ளது.

Recent posts

2026 உலகக்கிண்ண கால்பந்து ஜூன் 11 – ஜூலை 19

2026 உலகக்கிண்ண போட்டி ஜூன் 11ஆம் தேதி மெக்ஸிகோ சிட்டியின் சிறப்புமிக்க எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் தொடங்குகிறது . தொடக்க ஆட்டத்தில் அந்நாட்டின் அணியான மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை...
Thamil Paarvai

கனடா கால்பந்து அணி: 2026 உலகக்கிண்ண வீரர்கள்

2026 உலகக்கிண்ணம் கனடாவின் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். பனி ஹாக்கிக்கு பெயர் போன நாடு, இம்முறை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ...
Thamil Paarvai

பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும்

IPL 2026: பதிவுகள் உடையும் சீசன் – கடைசிப் பந்து வெற்றியும், வெளியேறும் மும்பையும்! ராய்ப்பூர், மே 11: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன்,...
Thamil Paarvai

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

உலகக் கிண்ணத்தை வென்றது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும்...
Thamil Paarvai

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

Leave a Comment