பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில்இ 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் , முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலால் நாடே கொந்தளித்தது. இந்த தீவிரவாத அமைப்புக்கும், இதை சீராட்டி வரும் பாகிஸ்தானுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஆவேசப்பட்டனர். ‘தீவிரவாதிகளை அழிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, கடந்த மாதம் 26-ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இதில், பாலகோட்டில் செயல்பட்ட ஜெய்ஷ் , முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியமான முகாம் தகர்க்கப்பட்டு. 350 தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர். இந்த 90 வினாடி தாக்குதலில் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. சக்தி வாய்ந்த இந்திய விமானங்களை தடுக்க வந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள், மிரண்டு போய் பின்வாங்கின. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் இந்திய விளம்பரங்கள் உள்ளிட்டவை அந்நாட்டில் ஒளிபரப்ப தடைவிதித்திருந்தது. இதனை போன்று இந்தியாவிலும், பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன், விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




