சினிமா திரைவிமர்சனம்

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. டிமான்ட்டி காலனி 2 படம் எப்படி இருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேய் படங்கள் என்றாலே ஒருவித ஈர்ப்பு காலங்காலமாக இருந்துவருகிறது. அப்படி வந்த படங்களில் டிமான்ட்டி காலனி படத்துக்கு தனித்த இடம் உண்டு. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடித்து வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டில் அருள்நிதி இறப்பது போல் முதல் பாகம் முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே parallel ஆக பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் காண்பிக்கப்படுகிறது. சீனிவாசன் (அருள்நிதி) மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன் ரகுநந்தன் (இன்னொரு அருள்நிதி), தந்தையின் சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார்.

அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் டெபி (பிரியா), அவருடன் இணைந்து டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான அமானுஷ்ய சம்பவங்களே டிமாண்டி காலனி 2-யின் விறுவிறுப்பான திரைக்கதை.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கு டெபி விடைதேடி அலைகிறார்.

அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தொடர்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ரகு கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சுயநலவாதியாக வரும் அருள்நிதி, சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை.

சாம் C.Sயின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி திகிலூட்ட அது உதவுகிறது. பாடல்கள் ஓகே ரகம். இடைவேளையிலேயே படம் முடிந்தது போன்ற உணர்வை முதல் பாதி தருகிறது.

அந்த அளவிற்கு இயக்குநர் கதையில் கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தில் பல ட்விஸ்ட்கள் ஒளிந்திருப்பது நம்மை சீட் எட்ஜில் அமர வைக்கிறது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம்.

மொத்தத்தில் திகிலான ஹாரர் படம் பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் இந்த டிமாண்டி காலனி 2.

Recent posts

‘போராட்டம்’ விமர்சனம் (2026)

‘போராட்டம்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: ராஜ் சிவராஜ்நடிகர்கள்: றீகன் (பாஸ்கரன் றீகன்), நிவேதிகா ராசையாஇசை: பூவன் மதீசன்ஒளிப்பதிவு: ஏ.கே. கமல்வெளியீடு: அக்டோபர் 2, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘சிக்மா’ விமர்சனம் (2026)

‘சிக்மா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2/5 இயக்குநர்: ஜேசன் சஞ்சய்நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜூ சுந்தரம்நீளம்: 145 நிமிடங்கள் சுருக்கம் தமிழ்நாடு முதலமைச்சரும்...
Thamil Paarvai

‘பத்தா’ விமர்சனம் (2026)

‘பத்தா’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 3.5/5 இயக்குநர்: பாலாஜி தரணீதரன்நடிகர்கள்: விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிருத்விராஜ், சஹஸ்ரா ஸ்ரீநீளம்: 145 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர் 1, 2026...
Thamil Paarvai

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)

‘ஏழு கடல் ஏழு மலை’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ராம்நடிகர்கள்: நிவின் பாலி, சூரி, அஞ்சலிஇசை: யுவன் சங்கர் ராஜாவெளியீடு: அக்டோபர் 1, 2026 சுருக்கம்...
Thamil Paarvai

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)

‘அன்பில் அவன்’ விமர்சனம் (2026)மதிப்பீடு: 2.5/5 இயக்குநர்: ஆர். கார்த்திகேயன்நடிகர்கள்: அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ், ரேவதிநீளம்: 157 நிமிடங்கள்வெளியீடு: அக்டோபர்...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

‘ஹாய்’ திரைப்பட விமர்சனம்

கவின் – நயன்தாரா காதல் எப்படி இருக்கு? படம் ஃபீல் குட்டா? நடிப்பு: கவின், நயன்தாரா, பிரபு, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், சுஹாசினிஇயக்கம்: விஷ்ணு எடவன்இசை: ஜென்...
Thamil Paarvai

‘ஒன்ஸ் மோர்’ திரைப்பட விமர்சனம்: காதல் முக்கோணம்… ஆனால் ரசிக்க வைக்குமா?

நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல்இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்இசை: ஹேஷம் அப்துல் வஹாப்வெளியீடு: ஆகஸ்ட் 28, 2026 காதல் தோல்வி, பழைய காதல், புதிய...
Thamil Paarvai

அந்தோணி: திரைப் பார்வை “தனியாவே இருந்துடுவேனோன்னு தான் பயமா இருக்கு”

போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும்...
Thamil Paarvai

Leave a Comment