Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியுள்ள முன்னாள் அமைச்சர்-வடக்கு மக்கள் தொடர்பில்

சீனாவின் ‘சினோபோர்ம்’ கோவிட் தடுப்பூசிகளை வடக்குக்கு வழங்கி அம்மக்களின் மனங்களை வெல்ல ராஜபக்ச அரசு எடுத்துள்ள நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். அதேபோல் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கி அம்மக்களின் முழு மனதையும் வெல்ல அரசு முன்வரவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கோவிட் தொற்றால் வடக்கு மாகாண மக்களும் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். வடக்கிலுள்ள சகல மக்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டும். அதேபோல் ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.

சீனாவின் தடுப்பூசி விவகாரத்தில் மிகப் பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் உண்மைத்தன்மையை இலங்கை அரசும் சீனத் தூதரகமும் கூட்டாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து இரு தரப்பும் தனித்தனியே மறுப்புக் கருத்துக்களைத் தெரிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை.

சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் முன்னணி நாடுகளிடமிருந்து கோவிட் தடுப்பூசிகளை அரசு விரைந்து கொள்வனவு செய்ய வேண்டும்.

நாட்டு மக்களுக்கு ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியை ஏற்றினால் மட்டும் போதாது. இரண்டாவது ‘டோஸ்’ மருந்தையும் உரிய காலத்துக்குள் ஏற்ற வேண்டும். அப்போதுதான் கோவிட் நோய்த் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும்” – என்றார். 

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment