Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை அரசாங்கம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அறிவிப்பு

எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவினை முதல் அளவை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்திக் கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்பக்குழு சமர்ப்பித்த கண்டறிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது.

உலக சுகாதார மையம், தமது கண்டறிதலில், ஆறு மாதங்களில் கூட எ எஸ்ட்ராசெனெகா இரண்டாவது அளவைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் அதுவரை காலப்பகுதிக்கு எஸ்ட்ராசெனெகாவின் முதல் அளவு நோய் எதிர்ப்பு திறனைக் கொண்டிருப்பதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

இலங்கை ஆரம்பத்தில் 500,000 குப்பிகள் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்தியாவில் இருந்து இலவசமாகப் பெற்றது, மேலும் 500,000 தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்தது.

இரண்டாவது அளவாக பயன்படுத்த எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் சுமார் 350,000 அளவுகளை அரசாங்கம் வைத்திருந்தது.

அதில் ஒரு பகுதியை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் இரண்டாவது அளவை வழங்க பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் எனினும் ஏற்கனவே முதலாவது அளவு கிடைத்தவர்களுக்கு இரண்டாவது அளவை செலுத்த இன்னும் 6 இலட்சம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

Recent posts

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

Leave a Comment