இந்தியாவில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களிடம் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஜெய்ஷ் – இ – முகமதுஇ லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகள், இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தினால்,பாகிஸ்தான் மிகப்பெரிய பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனால், பதற்றம் அதிகரித்து இரு நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறினார்.