அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டோனால்ட் டிரம்ப்பின் பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் ரஷ்யாவின் சதித்திட்டத்தில் உடந்தையாக இருக்கவில்லை என்று ராபர்ட் முல்லர் தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் வில்லியம் பர் அமெரிக்க காங்கிரஸ் சபையிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டனை தோல்வியுறச் செய்ய ரஷ்யா குறுக்கிட்டு வதந்திகளைப் பரப்பியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடத்த ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு நியமனம் செய்யப்பட்டது. இக்குழு 22 மாதம் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதிக்குழு முன்பு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகைக்கு அறிக்கையின் விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் டிரம்ப் அரசு அறிவித்தது. தற்போது அந்த அறிக்கையில் டிரம்ப் அல்லது அவருடைய கட்சியின் ஒரு நபர் மீது கூட ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வில்லியம் பர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இவ்வாறு அமைப்பதற்கு அதிபர் டிரம்ப்பின் அழுத்தம் ராபர்ட் முல்லரின் விசாரணைக் குழுவின் மீது இருந்ததா என்றும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அதிபர் டிரம்ப்போ தம்மீதான எந்த ஒரு விமர்சனத்திற்கும் ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை. அவர் புளோரிடாவில் உள்ள சொகுசு கடற்கரையில் தமது விடுமுறையைக் கழித்து வந்தார். இன்று அதிகாலை அவர் தனிவிமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப். ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை என்று கூறினார்.
Recent posts
2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)
2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன
ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்
பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்
புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
புதிய பாதையை நோக்கிய கனடா
கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்
தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்
தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.
அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...




