உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஐ.நா பருவநிலை பேரவையில் 2030-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமாக குறைக்க தீர்மானம்

வரும் 2030-ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க ஐ.நா பருவநிலை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.கென்யாவின் தலைநகர் நைரோபியில் 5 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாட்டு சபையின் சுற்றுச்சூழல் பேரவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. இதனை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தி பின்னர் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை 2025-ம் ஆண்டிற்குள் கணிசமாக குறைக்க கோரிய தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் எதிர்த்தன. இதனால் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது. இதனையடுத்து பேசிய ஐ.நா பருவநிலை பேரவையின் தலைவர் சீம் கிஸ்லர்இ இவ்விகாரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஏற்ற தீர்வை கண்டறிவது சிரமம். எனவே தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பேச்சுவார்த்தையுடன் நின்று விடாமல், உறுதியாக அனைத்து நாடுகளும் செயல்படுத்த முன் வர வேண்டும் என கோரினார்.
ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. இதனை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நைரோபியில் நடைபெற்ற ஐ.நாவின் பருவநிலை பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானத்திற்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக 2025-ஆம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க கோரும் தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent posts

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு.

கிரிக்கெட் ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசன் வரும் **மார்ச் 28, 2026 அன்று** பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது...
Thamil Paarvai

கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால்,   தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ்...
Thamil Paarvai

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது

அரசு கட்டிடங்களில் வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் வழக்கத்தை டொராண்டோ முடிவுக்குக் கொண்டுவருகிறது தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் இந்த வழக்கம் பிளவுகளை உண்டாக்குகிறது என்ற வாதத்தை பெரும்பாலான...
Thamil Paarvai

கனடா நேட்டோவின் எல்லையை கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மேற்கத்திய கூட்டணியின் வருடாந்திர பொதுச்செயலாளரின் அறிக்கை மற்றும் புள்ளிவிவரத் தொகுப்பின்படி, கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் என்ற நேட்டோவின் பாதுகாப்புச்...
Thamil Paarvai

பழங்குடியினர் உளவுத் திட்டத்திற்காக மன்னிப்பு தேவை என கார்னி கூறுகிறார்.

கூட்டாட்சி அரசின் ஆதரவுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். “ஆம், மன்னிப்பு கோரப்பட...
Thamil Paarvai

‘கணிக்க முடியாத பொருளாதார அதிர்ச்சிகள்’ஒன்ராறியோவின்(Ontario) பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது.

“தொடர்ந்து நிலவும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு” ​​மத்தியில், வரும் ஆண்டிற்கான ஒன்ராறியோவின் கணிக்கப்பட்ட பற்றாக்குறை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2026-2027-ஆம் ஆண்டில் மாகாணம் 13.8...
Thamil Paarvai

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வெளி தாக்குதல்கள்...
Thamil Paarvai

சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

கனடாவின் மொன்றியல் நகரில், வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த இரண்டு முதியவர்கள் தனித்தனியான சமூக வெப்பமூட்டும் மையங்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர மேயர்...
Thamil Paarvai

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த F-18 போர் விமானம் ஒன்று நேற்று மாலை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் பதற்றத்தின் மத்தியில்...
Thamil Paarvai

Leave a Comment