Uncategorized இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்துவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது : கிரண் பேடி

புதுச்சேரியில் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 11ம் தேதிமுதல் புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும், தொடர்ந்து தலைக்கவசத்தை அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுநர் உரிமத்தை முடக்கவும் கிரண் பேடி உத்தரவிட்டார்.

அதன்படி போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டித்து நேற்று அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்கள் மண்சட்டியை தலையில் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று புதுவை பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைக்கவசத்தை உடைத்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பேசிய ஆளுநர் கிரண் பேடி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று கூறியுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும் அவர் தெரிவித்தார். கட்டாய ஹெல்மெட் உத்தரவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று கிரண் பேடி தெரிவித்தார்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment