Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த யாழ்.மாணவனை வேதனைப்படுத்தும் பதிவு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் 30 வருடத்திற்குப் பின்னர் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவன் தேசியரீதியில் முதலிடத்தைப் பிடித்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அந்த மாணவனது புகைப்படத்துடன் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளது புகைப்படங்களை இணைத்து சிலர் பதிவிட்டிருப்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கண்டித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே, இதுபோன்ற செயற்பாடுகள் மிகவும் கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

கணிதப்பிரிவில் முதலிடத்தைப் பெற்ற தனராஜ் என்பவரது புகைப்படத்துடன் இன்று விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைத்தளங்களில் படங்கள் பதிவேற்றப்பட்டதைக் கண்டேன்.

30 வருடப் போரின் பின்னர் கணித பாடத்தில் யாழ்ப்பாணத்தில் முதலிடத்தை மாணவர் ஒருவர் பெற்றிருக்கின்றார்.

அப்படியான சூழல் உருவாகியிருக்கின்றது. அன்று அரச தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போதைய அரச தலைவரான கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அப்படியான நிலைமைகள் ஏற்படும் வகையிலான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

அதன் காரணமாகவே இதுபோன்ற திறமைசாலிகள் இன்று முன்னிலை வகிக்கின்றனர்’எனத் தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவர் தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இப் பதிவு மாணவனிற்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recent posts

உரிமைக்கான போராட்டம் தொடர்கிறது

பில் C-39: வேலைநிறுத்த உரிமையை முடக்கும் புதிய சட்டம் – தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு கனடாவின் லிபரல் அரசு செப்டம்பர் 21, 2026 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல்...
Thamil Paarvai

அதிகாரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டது

டிரம்பின் ஊடகத் தடை: வெள்ளை மாளிகையில் இருந்து நிருபர்களை வெளியேற்றியது எப்படி அவருக்கே எதிரான பேரழிவாக மாறியது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து...
Thamil Paarvai

ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: கேவாடியாவில் வரலாற்று விழா – முழு விவரம் இந்தியத் திரைப்படத் துறையின் மிக உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகள், 72-வது...
Thamil Paarvai

வானம் ஏன் திடீென மௌனமானது?

வான்வெளியை முடக்கும் மர்ம சக்தி? அமெரிக்கா முதல் லண்டன் வரை அதிர்ச்சி! 2026 ஆம் ஆண்டு, உலக வான்வெளியில் ஒரு தொடர் மர்ம நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. லண்டனில்...
Thamil Paarvai

கனடா விதிகள் கடுமையாக்கம்

கனடா PR விதிகள் கடுமையாக்கம்: AIP விண்ணப்பதாரர்களுக்கு 90 நாள் கெடு – முழு விவரம் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை (IRCC), அட்லாண்டிக்...
Thamil Paarvai

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

Leave a Comment