இந்தியா செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு…டெல்லியில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம்

பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரங்கல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமேரிக்கா துணை நிற்கும் என கென் ஜஸ்டர் உறுதியளித்தார்.  சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிஆர்பிஎப் வீரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மாஒளி கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்கள் உயிழப்புக்கு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நாடே துணை நிற்கும் என்று அமித்ஷா தெரிவித்துளளார்.இதனை தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதிக்கு என்ஐஏ குழு நாளை செல்கிறது. இந்நிலையில் புல்வாமா பகுதிக்கு என்ஐஏ குழு நாளை செல்கிறது.ஐ.ஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய விசாரணை முகாமை விசாரிக்க உள்ளது.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment