🌟 திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

🌟 வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
🌟 திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ இவர்களின் பிறப்பின் அர்த்தமே திருமணபந்தத்தில்தான் உள்ளது. திருமணப்பேறு ஏற்பட்டவுடன் அதற்கு அடுத்தக்கட்டமாக வாழையடி வாழையாக சந்ததிகள் என்ற புத்திரபாக்கியம் மிகவும் அவசியமாகிறது.
🌟 குழந்தை பிறப்பு என்பது அந்த தம்பதியினருக்கு தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சியும், இரு குடும்பத்தாரிடம் பரஸ்பர இன்பமும், நெருக்கமும் ஏற்பட வழிவகுக்கின்றது. குழந்தை பிறப்பை பற்றி சொல்லும்போது இதில் கணவன், மனைவி இருவரின் பங்கும் சரிசமமாகிறது.
🌟 திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு காரணங்களினால் குழந்தை பாக்கியம் என்பது தாமதம் ஆகின்றது. குழந்தை பாக்கியம் ஜாதகத்தின் அடிப்படையில் சில நேரங்களில் தாமதப்படுகின்றது.
🌟 புத்திர மற்றும் பாக்கிய பாவ அதிபதிகளும் வளமுடன் இருக்கும் காலக்கட்டத்தில் நமக்கு தடைகள் இருப்பினும் அதனை யாவும் நீக்கி குழந்தை பாக்கியத்தை அமைத்து கொடுப்பார்கள். அந்த வகையில் வருகின்ற சனிப்பெயர்ச்சியில் குழந்தை பாக்கியத்தை பெறப்போகும் ராசிகள் யார்?… என்பதை பற்றி நாம் பார்ப்போம்.
ரிஷபம் :
🌟 பாக்கிய ஸ்தான அதிபதி ஆட்சி பெறுவதினால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி :
🌟 புத்திர ஸ்தான அதிபதி ஆட்சி பெறுவதினால் திருமணமான தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் இந்த காலக்கட்டத்தில் ஏற்படும்.
துலாம் :
🌟 புத்திர ஸ்தான அதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதினால் தடைபட்டு வந்த புத்திர பாக்கியத்தை இந்த காலக்கட்டத்தில் அமைத்து கொடுக்கும்.
🌟 மேலும், அவரவர்களுக்கு நடைபெறும் திசாபுத்திகளுக்கு ஏற்ப குழந்தை பாக்கியத்தை அமைத்து கொடுக்கும்.