இயற்கை அழகு பொது மருத்துவம்

சருமத்தை பாதுகாத்து பலன்கள் தரும் கஸ்தூரி மஞ்சள்.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.

கஸ்தூரி மஞ்சள் மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.

கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும். பருக்கள் வாராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். சூடு கட்டிகள் மற்றும் காயங்களை குணப்படுத்தும்.

கஸ்தூரி மஞ்சளையும். பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வரவேண்டும்.

கஸ்தூரி மஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும்

Recent posts

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் ஆரோக்கிய விளைவுகள்.

சிகரெட் புகைப்பதால் உடல்நல பாதிப்புகள் இருப்பதை எல்லோருக்கும் தெரியும். புகைபிடித்தல் மூக்குக்கு வெறுக்கத்தக்கது, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நுரையீரலுக்கு ஆபத்தானது. புகைபிடித்தல் என்பது உங்களுக்கு ஏற்படக்கூடிய...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

இந்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம் !!

இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 👧 செயற்கையான அழகுச்சாதனப்...
Thamil Paarvai

பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள் !!

பொதுவாக சிலர் அழகாக இருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பற்களில் கறை படிந்து இருந்தால் மற்றவர்களுடன் பேசுவதற்கு தயங்குவார்கள். பிறரிடம் சாதாரணமாகப் பேசுவதைக் கூட தவிர்த்து தனிமையாக இருப்பார்கள்....
Thamil Paarvai

Leave a Comment