பீஜீ நாட்டிலிருந்து இலங்கை சென்ற நபர் ஒருவர் கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மாரவில நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிரகாஷ் என்ற வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்து மின்மாற்றியில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி இலங்கை வந்துள்ள நிலையில் எதிர்வரும் 28ஆம் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லத் தயாராக இருந்துள்ளார்.
தந்தையின் மரணம் மிகவும் வேதனையான ஒரு விடயமாகும் என அவரது மகன் அர்ஜுன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
எனது கணவர் தீவிர கிருஷ்ண பக்தர். ஆலயங்களுக்கு செல்லும் நோக்கில் இந்தியாவுக்கு பல முறை சென்றுள்ளார்.
முதன்முறையாக இலங்கைக்கு சென்ற வேளையில் உயிரிழந்துள்ளார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பியவுடன் இந்தியாவில் வசிக்கும் தாத்தாவை பார்க்க செல்வோம் என கணவர் குறிப்பிட்டார் என மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.