Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு .

விஞ்ஞானத்தின் சிறப்பை இந்நாளில் அறியாதவர் எவரும் இல்லையென்றே சொல்லாம். அதற்கு ஏற்றவாறு விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது ஜப்பான் விண்வெளியில் இருக்கும் குப்பைகளைக் குறைக்கும் நோக்கத்தில் புதிதாக ஒரு செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது. அந்த செயற்கைக்கோளைப் பற்றி வாங்க பார்க்கலாம்.

இதில் எப்படி விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடியும்?

👉 ஜப்பானின் சுமிட்டோமோ வனவியல் (Sumitomo Forestry) நிறுவனம், கியோட்டோ பல்கலைக்கழகத்துடன் (Kyoto University) இணைந்து, மரத்தினால் செய்யப்பட்ட ஒரு செயற்கைக்கோளை 2023 ஆண்டுக்குள் தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யுமென்று, சமீபத்தில் வெளியான பிபிசி இன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 சுமிட்டோமோ வனவியல் நிறுவனம் என்பது, ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான சுமிட்டோமோ குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

👉 சுமிட்டோமோ நிறுவனம் தற்போது வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியை எதிர்க்கும் மரப்பொருட்களை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

என்ன ரகசிய திட்டம்??

🚀 சுமிட்டோமோ உருவாக்கிவரும் இந்த தனிச்சிறப்பு பொருளை ‘ஆர் அண்ட் டி ரகசியம்” என்று அழைக்கிறது.

🚀 இது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் வெளியிடாது என்று அதன் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

🚀 ஆனால், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் எப்படிச் செயல்படும் என்பதை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

🚀 முதலில், இந்த திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பூமியில் தீவிர சூழலில் தாக்குப்பிடிக்கும் பல்வேறு வகையான மரங்களைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள், தற்போதைய செயற்கைக்கோள்களைப் போலவே, தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாமல் பார்த்துக்கொள்வது.

🚀 பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது எரிந்துபோகும் மர செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் முதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

🚀 தீவிர வெப்பநிலையைத் தக்கவைக்கும் சரியான வகையான மரத்தைக் கண்டுபிடித்த பிறகு, விஞ்ஞானிகள் செயற்கைக்கோளின் பொறியியல் மாதிரியை உருவாக்குவார்கள்.

🚀 அதன் பிறகு, விஞ்ஞானிகள் குழு செயற்கைக்கோளின் விமான மாதிரியைத் தயாரிப்பார்கள்.

🚀 பின்னர், உருவாக்கப்பட்ட பாதுகாப்பான மர செயற்கைக்கோள் விண்வெளி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும் என்று கியோட்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஜப்பானிய விண்வெளி வீரருமான தகாவோ டோய் கூறியுள்ளார்.

🚀 பெருகி வரும் விண்வெளிக் குப்பை புதிய ராக்கெட் ஏவுதல்களுக்கும், விஞ்ஞானிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

🚀 உலக பொருளாதார மன்றத்தின் கணிப்புப் படி, 10 சென்டி மீட்டர் அளவுக்குப் பெரிய சைசில் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 விண்வெளிக் குப்பை துண்டுகள் உள்ளன என்றும், இன்னும் பல விண்வெளிக் குப்பைகள் கணிக்க முடியாத வகையில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

🚀 இதன் காரணமாக விண்வெளியில் ராக்கெட் மோதலுக்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

😎 மரத்தில் செயற்கைக்கோளா?? சாத்தியமாக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள்!! 😎

Recent posts

2026 குளிர்கால ஒலிம்பிக் (மிலான்-கோர்டினா) நிகழ்ச்சிகளின் தினசரி நேர அட்டவணை (Daily Schedule)

2026 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் இத்தாலியில் மிலான் (Milan) மற்றும் கோர்டினா டி’அம்பெசோ (Cortina d’Ampezzo) பகுதிகளில் நவம்பர் 6 முதல் 22 வரை நடைபெற்றன. 🇮🇹இவை...
Thamil Paarvai

விளையாட்டுகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன

ஒலிம்பிக் விளையாட்டுகள் மனித உடல் திறன், மன உறுதி மற்றும் உலக ஒற்றுமையின் சின்னமாக விளங்குகின்றன. அதில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பனி மற்றும் பனிக்கட்டுகளில் நடைபெறும்...
Thamil Paarvai

பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு !உடனடியான வைத்திய ஆலோசனை பெறவும்

பேரிடருக்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு இலங்கை பொது...
Thamil Paarvai

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு! முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின்...
Thamil Paarvai

இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள்

புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெப்பமண்டல புயலால் அதிகரித்த...
Thamil Paarvai

புதிய பாதையை நோக்கிய கனடா

கனடா 2025 கூட்டாட்சி பட்ஜெட் “Canada Strong” — நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை ஆற்றல், மற்றும் சமூக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய தேசிய...
Thamil Paarvai

சீனாவின் அதிர்ச்சி கட்டமைப்பு: அணு தாக்குதல்களையும் தாங்கும் செயற்கை தீவு உருவாக்கம்

தென் சீனக் கடலில் வெளிப்பட்ட புதிய இராணுவ ரட்சண தளம்; உலக நாடுகள் கவலை பீஜிங், புதன்:தென் சீனக் கடலில் சீனா அமைத்துள்ள புதிய செயற்கை தீவுக்...
Thamil Paarvai

தீபாவளி பண்டிகை :கனடாவில் வெளியான சிறப்பு அஞ்சல்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல்...
Thamil Paarvai

அமெரிக்காவுடன் பேச்சுக்கு தயார் கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட அறிவிப்பு.

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்துள்ள அவர், கோலாலம்பூரில்...
Thamil Paarvai

Leave a Comment