ஆரோக்கியம்

இந்த விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்

உணவில்லாமல் கூட மனிதன் ஓரிரு நாட்கள் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர்வாழ்வது என்பது சாத்தியமில்லை. தண்ணீர் அருந்துவதால் பலவித மருத்துவப் பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கின்றது.

👉 நாம் சுத்தாமான தண்ணீரை தான் அருந்துகிறோமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில் நம் அன்றாட தேவைக்காக தண்ணீரை சேமித்து வைக்கின்றோம். இவ்வாறு நாம் தினந்தோறும் சேமித்து வைக்கும் தண்ணீரை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

👉 நீங்கள் தண்ணீரை சேமித்து வைக்க காப்பர் அல்லது சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால் தண்ணீரின் தன்மை மாறாது. காப்பர் பாத்திரங்களில் சேமித்த தண்ணீரை அருந்துவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

👉 நீங்கள் தொட்டிகள் மற்றும் டிரம்களில் தண்ணீரை சேமித்து வைப்பவராக இருந்தால், சு+ரிய வெளிச்சம் படும்படி தொட்டிகள் மற்றும் டிரம்களை வைத்து, தண்ணீரை சேமிக்க வேண்டாம்.

👉 தினந்தோறும் அன்றாட தேவைகளுக்காக தண்ணீரை புட் கிரேடு பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் சேமித்து வைக்கலாம். சாதாரண பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது.

👉 தண்ணீரை எதில் சேமித்து வைத்தாலும், அதனை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

👉 திறந்த நிலையில் இருக்கும் தண்ணீரை பருகாமல் தவிர்ப்பது உங்கள் உடலுக்கு நல்லது.

👉 பலரும் பாட்டில்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பார்கள். பாட்டில்களில் தண்ணீரை சேமித்து வைக்கும்போது, பாட்டில்களை நன்றாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம். மேலும் பாட்டிலின் உள்பகுதி மற்றும் மூடிகளை நன்றாக சுத்தம் செய்வது அவசியமாகும்.

👉 தண்ணீரைக் குடித்தவுடன் பாட்டில்களை தவறாமல் மூடி வைக்க வேண்டும்.

👉 நீங்கள் பாட்டிலில் வாய் வைத்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், மற்றவருக்கு இதைப் பயன்படுத்தக் கொடுக்காதீர்கள்.

Recent posts

பெண்களின் உடல்நலப் புரிதலில் ஆழமான ஆய்வு

பெண்களின் உடலைப் பற்றிய ஆய்வு: தமிழ்நாட்டின் சூழலில் ஒரு முழுமையான பார்வை பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (Reproductive Health) என்பது ஒரு சிக்கலான, பன்முகத்...
Thamil Paarvai

உலகப் பெண்களின் உடல் நலம்: ஓர் உலகளாவிய ஆய்வு (2025-2026)

பெண்களின் உடல் நலம் என்பது உயிரியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் காரணிகளின் சிக்கலான இணைப்பாகும். உலகம் முழுவதும், பெண்கள் தனித்துவமான உடல்நல சவால்களை எதிர்கொள்கின்றனர் –...
Thamil Paarvai

கருவில் குழந்தையின் நிலைகள் (Fetal Malpresentation) – தெளிவான வழிகாட்டி

“ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அதிசயம். ஆனால், சில குழந்தைகள் தாயின் வயிற்றில் சரியான நிலையில் இருப்பதில்லை. அந்தச் சமயத்தில், அறிவும், விழிப்புணர்வும் தாய்க்கும், குழந்தைக்கும் பாதுகாப்பை...
Thamil Paarvai

நீரிழிவு நோய் எப்படி உண்டாகிறது? – உங்கள் நோய் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

“நீரிழிவு என்பது ஒரு நோய் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறையின் எச்சரிக்கை. ஆனால், அதைத் தெரிந்துகொண்டால், அதை வெல்லலாம்.” மெளனமாக நெருங்கும் கொடிய நோய் நீரிழிவு...
Thamil Paarvai

உடற்பயிற்சிக்கு சிறந்த நேரம்: காலையா, மாலையா?

உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு ‘ஒரே ஒரு பதில்’ இல்லை. ஏனெனில், உங்கள் இலக்குகள், உடலின் உயிரியல் கடிகாரம் (circadian rhythm), மற்றும் உங்கள்...
Thamil Paarvai

தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம்

நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நீங்கள் குளிகை நேரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். யார் அந்த...
Thamil Paarvai

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

Leave a Comment