“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு குப்பையில் தூக்கிவீச வேண்டும். அதன் பரிந்துரைகள் அனைத்தையும் அடியோடு நிராகரித்து உலக நாடுகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பவேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நாவின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை அரச குழு இணை அனுசரணை வழங்கியமை மகா தவறு. நாட்டின் ஜனாதிபதி சுமந்திரன் அல்லர். மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தான்தான் நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் ஜெனிவாவில் செயற்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானமே ஆகும். இதனை வெறும் தீர்மானமாக நாம் நினைக்கக்கூடாது.
இந்தத் தீர்மானத்தை குப்பையில் தூக்கிவீச வேண்டும். குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்த எமது இராணுவத்தை எவரும் தண்டிக்கவே முடியாது” – என்றார்.
Recent posts
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
உலகப் பொருளாதாரம் திரும்பியது
உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
“இதுதான்”
“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்
“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது
‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.
அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?
2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்
தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...




