கனடா செய்திகள்

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழினப் பிரச்சனைக்கு நீதி வழங்கத் தவறிவிட்டது :– கனடிய எதிர்க்கட்சித் தலைவர்

ஈழத் தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட,
கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார்
கனடிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள்.

மிசிசாக்க தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் மற்றும்
பொங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
சிறீலங்காவைப் பொறுத்தவரையில், மேற்குலக நாடுகளிடமிருந்து கணிசமான தொகை
நிதியுதவியைப் பெறுகின்ற ஒரு நாடு என்ற வகையில், சிறீலங்கா தனது ஜனநாயக
விழுமியங்களைப் பேணுவதற்கும் மனிதஉரிமையை மதிப்பதற்கும் முன்னுரிமை
வழங்க வேண்டும். கனடாவில் ஆட்சியிலுள்ள லிபரல் கட்சி கனடிய தமிழ் மக்களுக்கு
கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து போதிய எந்த நடவடிக்கையையும்
எடுக்காமலிருப்பது கவலைக்குரியது. அதனால்தான் கடந்த வருடம், ஒரு பொறுப்புள்ள
எதிர்க்கட்சி என்ற வகையில், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும்
போர்க்குற்றச் சாட்டுக்கள் குறித்த விடயத்தில் காத்திரமான நடடிவக்கைகளை
எடுக்கும்படி கனடிய அரசுக்கு பகிரங்க அழுத்தம் கொடுத்தோம் என்று தனது உரையில்
குறிப்பிட்டார்.

கொன்சவ்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை, கனடிய நாடு உலகெங்குமுள்ள
சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பேணும் விடயத்தில் உறுதியான ஒரு
நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும், பேச்சுரிமை மற்றும் மனிதஉரிமை பாதுகாப்பு
விடயத்தில் இன்னும் கனதியான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் நம்புகிறது
என்றும் அவர் தெரிவித்தார்.

மிகவும் கட்டுக்கோப்பும் கடின உழைப்பும் கொண்ட தமிழ் சமூகத்தினரை விதந்து
பாராட்டிய கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள், தமிழர்களின் வளர்ச்சியையும்
எழுச்சியையும் தாம் பெரிதும் மதிப்பதாகக் கூறி, தமது பொங்கல் வாழ்த்துக்களை நேரில்
பகிர்ந்து கொண்டார்.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment