Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்!

ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்கா என குளிர்ச்சியான பகுதிகளுக்கு ரஷ்யர்கள் படையெடுக்கின்றனர்.

ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது இந்தியாவில் 40, 41 டிகிரி செல்சியஸ் என வெயில் கொளுத்துவது சர்வ சாதாரணம் என்றாலும் குளிர் பிரதேசமான ரஷ்யாவில் நிலவும் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோவிலும் இதே நிலைமைதான். மாஸ்கோவில் கடந்த திங்கட்கிழமை பதிவான 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 120 ஆண்டுகளில் இல்லாதது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நகரின் மையத்தில் அரசு கட்டிடங்களின் எதிரே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளின் அருகே அமர்ந்துகொண்டு மக்கள் இளைப்பாறுகின்றனர். நீரூற்றுகளில் வரும் தண்ணீரில் விளையாடியபடி நீண்டநேரம் பொழுதை கழிக்கின்றனர்.

கடற்கரைகள், பூங்காக்கள் மட்டுமின்றி ஒருசிலர் ரஷ்யாவின் எகோடியா நகரில் பனிப்படலங்கள் நிறைந்த பகுதிகளுக்கும் பயணிக்கின்றனர்.

கோடை காலத்தில் இறைச்சி மற்றும் சூடான உணவுகளை தவிர்க்கும் ரஷ்யர்கள், ஐஸ்கீரிம் மற்றும் குளிர்பானங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாறுபாடே ரஷ்யாவில் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Recent posts

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

Leave a Comment