தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது.
சகல வசதிகளுடனும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மிக வேகமாக பயணிக்கும் ரயில்களுக்கு பொருத்தமான தண்டவாளங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் 91 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடப்படவுள்ளது.
ஓமந்தை வரை 128 கிலோ மீற்றர் தூரத்திற்கு ரயில் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
புதிய ரயில் சேவை ஆரம்பிக்கும் பட்சத்தில் மிக விரைவாக தென்னிலங்கையில் இருந்து வடபகுதியை நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.