அறிவியல்

வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி..

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் ஆப் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமானது.

இன்றைய அவசர உலகத்தில் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை பெரும்பாலும் செயலிகளில் தான் பரிமாறிக் கொள்கிறார்கள். அதில் வாட்ஸ் ஆப் செயலி தான் முக்கிய பங்கை வகிக்கிறது.

தற்போது வாட்ஸ் ஆப் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அந்த வசதியைப் பற்றிக் காண்போம்.

வாட்ஸ் ஆப்:

📞 வாட்ஸ் ஆப் என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.

📞 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.

📞 2014-ம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை முகநூல் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.

வாட்ஸ் ஆப்பில் பிறந்தநாள் அறிவித்தல் வசதி:

📞 முகநூலைப் போல இனி வாட்ஸ் ஆப்பிலும் பிறந்தநாள் நோட்டிபிகேஷனைப் பெற முடியும். அந்த வசதியை எவ்வாறு பெற முடியும் என்பதை வாங்கப் பார்க்கலாம்.

Android பயனர்களுக்கு:

📱 முதலில், நீங்கள் Google Play Store-லிருந்து SKEDit என்ற பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.

📱 இதற்குப் பிறகு, அதைத் திறந்து பதிவு செய்க.

📱 பிரதான மெனுவிலிருந்து வாட்ஸ் ஆப்பில் தட்டவும். இந்த SKEDit-க்குப் பிறகு உங்களிடம் சில அனுமதி கேட்கும், அதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

📱 பின்னர் அணுகலை இயக்கு என்பதைத் தட்டவும், பின்னர் SKEDit-க்குச் சென்று மாற்று என்பதை இயக்கவும். பின்னர் Allow என்பதைத் தட்டவும்.

📱 அதன்பிறகு Ask Me Before Sending என்ற விருப்பம் Toggle காணப்படும். செய்தியை இயக்குவதன் மூலம் அதைத் திட்டமிடுங்கள். செய்தியை அனுப்புவதற்கு முன், உங்களுக்கு ஒரு iPhone அறிவிப்பு வரும், அதைத் தட்டிய பின்னரே, உங்கள் செய்தியை திட்டமிட முடியும். இதற்குப் பிறகு தானியங்கி செய்தி திட்டமிடப்பட்ட நேரத்தில் வழங்கப்படும்.

iPhone பயனர்களுக்கு:

📱 முதலில், Apple App Stor-லிருந்து Shortcuts செயலியை பதிவிறக்கி Automation-யை தேர்ந்தெடுக்கவும்.

📱 பின்னர் மேல் வலது மூலையில் உள்ள (%2B) icon-யை தட்டவும். ஊசநயவந Pநசளழயெட Automation என்பதைத் தட்டவும்.

📱 இதற்குப் பிறகு, Time of Day-யை தட்டவும், செய்தியை அனுப்புவதற்கான நேரத்தை திட்டமிடவும், Next-யை தட்டவும்.

📱 Add Action-யில், தேடல் பட்டியில் Text-யை தட்டச்சு செய்க. உரையைத் தேர்ந்தெடுத்து உங்கள் Text-யை தட்டச்சு செய்க.

📱 செய்தி பெட்டியின் கீழே உள்ள (%2B) ஐஉழn-யை தட்டி, தேடல் பட்டியில் Whatsapp-யைத் தேடுங்கள். Send Message via WhatsApp என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

📱 Done என்பதை தட்டவும். இதற்குப் பிறகு, உங்கள் நெருங்கியவர் பிறந்த நாள் அல்லது ஆண்டுவிழாவில் திட்டமிடப்பட்ட நேரத்தில் தானியங்கி வாழ்த்துக்களைப் பெறுவார்.

‘இனி உங்க Friends-க்கு மறக்காம Wish பண்ணிடுங்க”

Recent posts

புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் ஆரோக்கிய விளைவுகள்.

சிகரெட் புகைப்பதால் உடல்நல பாதிப்புகள் இருப்பதை எல்லோருக்கும் தெரியும். புகைபிடித்தல் மூக்குக்கு வெறுக்கத்தக்கது, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நுரையீரலுக்கு ஆபத்தானது. புகைபிடித்தல் என்பது உங்களுக்கு ஏற்படக்கூடிய...
Thamil Paarvai

பிட்காயின்

💫 கடந்த சில ஆண்டுகளில், பிளாக்செயின் (Block Chain) மென்பொருள் வழியாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயங்கள் (Digital Currency) அதிகம் பிரபலமடைந்து வருகின்றன. இந்த டிஜிட்டல் நாணயங்கள்...
Thamil Paarvai

Android-ல் Microsoft Office அறிமுகபடுத்தும் அம்சம்…..

🌟 மொபைல் சாதனங்களைப் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் மிகவும் வசதியான காட்சி அனுபவத்தை இருண்ட பயன்முறை அளிப்பதால் பலர் இருண்ட பயன்முறையைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். எனவே Microsoft...
Thamil Paarvai

சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு.

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா...
Thamil Paarvai

நமது வாழ்வுக்கு தீமை அமைக்கும் கார்பனீராக்சைடையை விஞ்ஞானிகள் புதிய முறையில் ஜெட் விமானங்களுக்கு …..

நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே போகிறது. நமது வாழ்வுக்கு தீமை அமைக்கும் கார்பனீராக்சைடையை விஞ்ஞானிகள் புதிய முறையில் ஆராய்ந்து அவற்றை ஜெட் விமானங்களுக்கு பயன்படுத்தலாம் என்று...
Thamil Paarvai

ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கு இதோ வந்துவிட்டது தீர்வு

குழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகிழும் ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனில் குறைபாடு இருக்கின்றமை தொடர்பில் சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. இக் குறைபாடானது FaceTime...
admin

பாஸ்வேர்டுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் – கூகுள் அறிமுகம்

இணைய பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படுகிறதா என்பதை அறியும் பாஸ்வேர்ட் செக்அப் எக்ஸ்டென்ஷன் (Password Checkup extension) என்ற புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இணையத்தில் வங்கிக்கணக்கு,...
admin

Leave a Comment