நான்கு வருடங்களுக்கு முன்பு வரைஇ நடிகர் அஜித்தும், அவரது மனைவி நடிகை ஷாலினியும், ஆண்ட்ராய்டு செல்போனைத்தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, சாதாரண செல்போனுக்கு மாறி இருக்கின்றனர். இதற்கான காரணத்தைக் கேட்டபோது, எல்லாமே பிள்ளைகளுக்காகத்தான்’ என பதில் அளித்திருக்கிறார் அஜித்.
இது தொடர்பாக, அவர் அளித்த கூடுதல் விவரம் வருமாறு:
பிள்ளைகள் கிடுகிடுன்னு வளர்ந்து விட்டனர். அவர்களுடைய வயதுக்கேற்ற வகையில்தான் அவர்களது செயல்பாடுகளும்; தேவைகளும் இருக்கும். நம்முடைய பிள்ளைகள்தான் என்பதற்காக, நம்முடைய விறுப்பு – வெறுப்புக்கெல்லாம் அவர்களை இழுக்க முடியாது. பிள்ளைகளை முழு சுதந்திரமாக விட வேண்டும். அதே நேரம்இ நம் கண்காணிப்பில் வைத்து வளர்க்க வேண்டும். தேவையில்லாமல், அவர்கள் சுதந்திரத்தில் தலையிட்டு, அவர்களை எரிச்சலாக்கக் கூடாது. அதாவது, அவர்களது எண்ணங்களை ஒரு போதும், வேறுபக்கம் கொண்டு போகும் முயற்சியில் வலுக்கட்டாயமாக இறங்கக் கூடாது.
இது ஒவ்வொரு பெற்றோருக்குமான கடமைதான். அதைத்தான், நானும்இ ஷாலினியும் எங்கள் பிள்ளைகளிடம் காட்டுகிறோம். அனோஸ்கா – ஆத்விக் இருவரும், வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது, செல்போன் டெக்னாலஜி இன்றைய காலகட்டத்தை விட, பல மடங்கு முன்னேறி விடும். அப்போது, அப்படிப்பட்ட போன்களை நாங்களும் வாங்கி பயன்படுத்தினால், அதனால், யாருக்கும் கெடுதல் இல்லை.இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.