சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம்

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர்

நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

கேப்டன் மில்லர் டிரெய்லரில் பார்த்ததை போலவே படம் முழுக்க துப்பாக்கி சத்தங்கள் ஆங்கிலேயர்களை துளைத்து எடுக்கும் காட்சிகள் என அதிகம் இருந்தாலும், இந்த படமும் அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போராகவே உருவாகி உள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், இளங்கோ குமரவேல், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், சந்தீப் கிஷன், ஜெய பிரகாஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1930 காலக்கட்டத்தில் நடக்கும் போராட்ட படமாக உருவாகி உள்ளது.

நான் லீனியர் எடிட்டிங் மற்றும் விக்ரம் வேதா படத்தை போல ஒவ்வொரு பிரிவாக கதை சொல்லும் விதம் என ஆரம்பமே அதிரடியாக ஆரம்பிக்கிறது. ஹாலிவுட்டில் வெளியாகி உள்ள போர் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ் படத்தை உருவாக்க வேண்டும் என்கிற தாகம் அருண் மாதேஸ்வரனுக்கு இருந்தது திரையில் தனுஷ் மூலமாக வெளிப்படுத்தி நிறைவு செய்துக் கொண்டார்.

கோயிலுக்கு அருகில் இருக்கும் குடிசைகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என அந்த பகுதி ராஜாவான ஜெயபிரகாஷ் அதிகாரம் செலுத்தி வருகிறார். ஆனால், அவரும் அவர் மகனுமான ஜான் கொக்கன் இருவரும் வெள்ளையர்களுக்கு அடிமைகளாக உள்ளனர். அந்த பெரிய வீட்டில் வளர்ப்பு மகளாக இருக்கும் வேல்மதி (பிரியங்கா மோகன்) போராளிகளின் இயக்கத்தில் சேர்ந்து விடுகிறார். அவரை கொல்ல ஜெயபிரகாஷ் ஆட்கள் வரும் போது தனுஷ் அவரை காப்பாற்றி அனுப்புகிறார். அனல் ஈசன் எனும் கதாபாத்திரத்தில் தனுஷும் அவரது அண்ணனாக செங்கோலன் எனும் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமாரும் நடித்துள்ளனர். போராட்ட இயக்கத்தில் செங்கோலன் செயல்பட்டு வரும் நிலையில், தனது தம்பியையும் தனது இயக்கத்திற்கு வர அழைக்கிறார். ஆனால், சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார்.

பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபடும் தனது மக்களையே சுட்டு வீழ்த்த வேண்டிய சூழல் வரும் போது தனுஷின் அண்ணன் செங்கோலன், பிரியங்கா மோகனின் கணவர் உள்ளிட்டோரை தனுஷ் சுட்டுக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பழி உணர்ச்சியில் இருந்து மீள கொள்ளைக் கூட்டத்தில் சேரும் தனுஷ் செய்யும் ஒரு காரியத்தால் அந்த ஊரையே ஆங்கிலேயர்கள் அழிக்க வருகின்றனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது ஊரை தனுஷ் காப்பாற்றினாரா? கோயில்களுக்கு மக்கள் சென்றார்களா? அராஜகம் செய்த ராஜாவின் குடும்பத்தினர் என்ன ஆனர்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

துப்பாக்கியில் இருந்து குண்டு பாயும் காட்சி, ஆங்கிலேயர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் தங்கள் அதிகாரத்துக்கு என காட்டப்படும் இடங்கள் என படம் முழுக்கவே தெறிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அனல் ஈசன் எப்படி கேப்டன் மில்லராக மாறுகிறான். அவனை பற்றிய கதையை எப்படி இளங்கோ குமரவேல் ஆரம்பிக்கிறார். கதையை சொல்லிக் கொண்டே கதைக்குள் செல்லும் விதம் என இயக்குநர் ரைட்டிங்கிலும் அதே போல படத்தின் எடிட்டர் நாகூரான் ராமசந்திரனின் கட்ஸ் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ் மட்டுமே ஒட்டுமொத்த படத்தையும் தாங்குகிறார் என்று சொன்னாலும், ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நல்லாவே நடிக்கவும் செய்துள்ளனர். பிரியங்கா மோகன் கையில் துப்பாக்கி என்பதை டிரெய்லரில் பார்த்து செட் ஆகுமா? என சிரித்தவர்கள் எல்லாம் படத்தில் அவரது நடிப்பையும் கிளைமேக்ஸில் அந்த துப்பாக்கியால் அவர் யாரை சுடுகிறார் என்பதை பார்த்து மிரண்டே போய் விட்டனர். தனுஷை தொடர்ந்து இளங்கோ குமரவேல் மற்றும் நிவேதா சதீஷின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். சிவராஜ்குமாருக்கு இந்த படத்தில் எக்ஸ்டன்டட் கேமியோ ரோல் போலத்தான் கதாபாத்திரம். அடுத்தடுத்த பாகத்தில் தான் அவர்களுக்கான கதை விரியும் என தெரிகிறது. சந்தீப் கிஷன் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த கதாபத்திரத்திற்கு நீதி செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் தனுஷ் இந்த படத்துக்காக தன்னுடைய ஒட்டுமொத்த நடிப்பையும் கொட்டித் தீர்த்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளைக்காரன் படையில் இருந்துக் கொண்டே ஜெனரல் ஒருவரை சுட்டு விட்டு அவரும் சுட்டுத் தற்கொலை செய்துக் கொள்ள பார்க்கும் இடங்கள் எல்லாம் டாப் நாட்ச். கேப்டன் மில்லர் படத்திற்கு இன்னொரு பலம் என்றால் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி தான். ஒவ்வொரு ஃபிரேமிலும் தனுஷ் வரும் காட்சிகள் எல்லாமே கூஸ்பம்ப்ஸ் காட்சிகளாக மாற்றிக் கொடுத்திருக்கிறார். கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி எல்லாம் வேறலெவல் கேமரா ஒர்க். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடித்து நிற்பது ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான். அசுரன் படத்திற்கு பிறகு தனுஷுக்கு மீண்டும் மிகப்பெரிய சம்பவத்தை ஜி.வி. பிரகாஷ் செய்திருக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தில் மைனஸே இல்லையா என்கிற கேள்விக்கு படத்தின் மேக்கிங் முதல் நடிகர்களின் நடிப்பு எல்லாமே நல்லா இருந்தாலும், படம் முழுக்க என்ன சொல்ல வருகிறது என்கிற கேள்வியும் இயக்குநர் எந்த குறியீட்டை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் அப்படியே குறைந்து போய் விட்டது படத்தின் பெரிய பலவீனம். அடுத்தடுத்த பாகங்கள் வெளியானல் தான் கேப்டன் மில்லர் எதை சாதித்தார். எப்படி வீழ்ந்தார் என்பதே தெரியவரும். இப்போதைக்கு வெளியான இந்த முதல் பாகத்தை தாராளமாக ஒரு முறை தியேட்டரில் பார்த்து ரசிக்கலாம்.

Recent posts

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

பழைய கதை ஆனால் புதிய வடிவம். திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம்

உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன்,...
Thamil Paarvai

விருமன்- திரை விமர்சனம்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
Thamil Paarvai

அதை சரியாகச் செய் கடமையை செய் திரை விமர்சனம்

கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகளை...
Thamil Paarvai

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
Thamil Paarvai

டிக்கிலோனா

நடிகர் சந்தானம் நடிகை அனகா இயக்குனர் கார்த்திக் யோகி இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு அர்வி நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த...
Thamil Paarvai

Leave a Comment