கிரிக்கெட் விளையாட்டு

அபார வெற்றி முதல் போட்டியில்…… சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி பந்துவீச்சில் சுருட்டி வீசி, அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார்.

அதன்படி, கோஹ்லியும், பர்திவ் படேலும் துவக்க வீரர்களாக களம் கண்டனர். கோஹ்லி சிங்கிள் எடுக்க, தீபக் சாஹரின் ஓவரில் ஐ.பி.எல் தொடரின் முதல் 4-ஐ அடித்து உற்சாகம் கொடுத்தார் பர்திவ் படேல்.

ஹர்பஜன் சிங்கின் 3வது ஓவரின் 3வது பந்தை கோஹ்லி தூக்கி அடிக்க, அது ஜடேஜாவின் கைக்குள் ஐக்கியமானது.

6 ஓட்டங்களில் வெளியேறினார் கோஹ்லி. அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி, வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

ஆனால் அவரும் ஹர்பஜன் சிங் வீசிய 5வது ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து 9 ஓட்டங்களில் நடையை கட்டினார்.

வீசிய 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஹர்பஜன். அடுத்தாக மைதானத்துக்குள் வந்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

அணிக்கு நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரது கேட்சை மிஸ் செய்தார் இம்ரான் தாஹிர்.

ஆனால் அடுத்த பந்தே மீண்டும் கேட்ச் போக அதை லாவகமாக பிடித்து ஆர்.சி.பியை மிரட்டினார் ஜடேஜா. தொடர்ந்து ஹெட்மெயரும் ரன் அவுட்டாக, 8 ஓவரின் முடிவில் 38-4 என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது ஆர்சிபி.

அடுத்து களமிறங்கிய ஷிவம் டுபேவும் இதற்கு விதிவிலக்கில்லை. 2 ஓட்டங்களில் இம்ரான் தாஹிரால் வெளியேற்றப்பட்டார்.

அடுத்த சில நிமிடங்களிலே கிராண்ஹோமும் வெளியேற 6 விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது ஆர்சிபி.

திணறிக்கொண்டிருக்கும் அணியை பர்திவ் படேல் எதிர்புறம் நின்றுகொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் 5 நிமிடத்துக்கு ஒரு வீரர் என்ற இடைவெளியில் பெங்களூர் வீரர்கள் வெளியேறியது, அணியின் ரன்ரேட்டை பெருமளவு குறைத்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

71 ஓட்டங்கள் என்ற மிகச் சிறிய இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. ஷேன் வாட்சன் 0, ரெய்னா 19, அம்பதி ராயுடு 28 ஓட்டங்களுக்கு வெளியறினர். இறுதியில் ஜடேஜா, ஜாதவ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 17.4 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recent posts

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றுடன் லீக்...
Thamil Paarvai

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும்...
Thamil Paarvai

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒலிம்பிக் தொடருக்கான சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்…

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை டோக்கியாவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பதக்கம் வெல்வதற்காக இந்திய வீரர்கள்-...
Thamil Paarvai

இந்திய வீரர்கள் குடும்பத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்செல்ல அனுமதி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்...
Thamil Paarvai

ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு – வில்லியம்சன்

கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி...
Thamil Paarvai

இலங்கை கிரிக்கெட்டின் வருவாய் இழப்பை சரிகட்ட கூடுதல் போட்டியில் விளையாட பிசிசிஐ சம்மதம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும்...
Thamil Paarvai

ஓய்வு அறிவிப்பைத் திரும்பப்பெற ஏபி டி வில்லியர்ஸ் மறுப்பு: தென்ஆப்பரிக்கா கிரிக்கெட் வாரியம்

தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு...
Thamil Paarvai

Leave a Comment