
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு நேற்று அமெரிக்க நாடாளுமன்றம், அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வு நேற்று நடைபெற்றது. அதில், தேர்வுக் குழு வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகள் எண்ணப்பட்டு, ஜோ பைடனை அதிகாரப்பூர்வமாக, அதிபராக அறிவிக்கப்பட்டார். தேர்வுக் குழு வாக்குகளில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் 306 வாக்குகளையும், குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டிரம்ப் 232 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக (தலைமை சட்ட அதிகாரி) மெரிக் கார்லண்ட் தேர்வு செய்ய ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொடர்பாக மெரிக் பி. கார்லண்டை அடுத்த அட்டர்னி ஜெனரலாக நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
68 வயதான கார்லண்ட், கொலம்பியா சர்க்யூட் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் 2016 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டதற்காக அவர் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.