
👨⚖️ அமைச்சர் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த கணத்தில் அவர் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு சம்பவம் அவருக்கு சாதகமாக அமைந்தது.
🗣️ அதாவது மணிகண்டன் தனது தாயிடம் பேச முயலுகையில், தாயோ தன் மகனிடம் பேசி மணிகண்டனிடம் பேசுவதை மறந்து தன் மகனிடம் உரையாடிக் கொண்டிருந்ததை கண்டார் முதலமைச்சர். அன்று முதல் அவரின் மனதில் எண்ணங்கள் யாவும் மாற்றம் அடையத் தொடங்கின.
👑 மகாராஜாவுக்கும், மகாராணிக்கும் இடையே அவர்களின் புதல்வன் உருவாகி அரண்மனையில் வளரத் தொடங்கினார். இந்த புதல்வரின் வருகையானது சிலரின் சூழ்ச்சிக்கு மிகவும் பயனுள்ள வகையில் மாறியது. அதாவது அமைச்சரின் சதித்திட்டத்திற்கு சுபிட்சமான பலன் அளிப்பதாக அமைந்தது.
🌊 ஒரு சமயம் அரண்மனையில் மணிகண்டன் இல்லாத சூழலில் மகாராணியும், அவரது மகனும் அரண்மனையில் இருந்த குளத்தில் விளையாடி காலத்தை கழித்துக் கொண்டிருந்தனர்.
💡 இந்த நிகழ்ச்சியைக் கண்ட அமைச்சர் இதுதான் மகாராணியிடம் உரையாடுவதற்கு தகுந்த சமயம் என எண்ணி மகாராணியிடம் தனது எண்ணத்தை அவர்கள் ஏற்கும் விதமாக மாற்றி உரைக்கத் தொடங்கினார்.
🙇♂️ அதாவது மகாராணியை கண்டு அவரிடம் தனது வணக்கத்தை தெரிவித்து தனது உரையாடலை தொடங்கினார். “உங்களுக்கு எவ்வளவு பெரிய மனது இருக்க வேண்டும்!” என்று தனது முதல் அம்பினைத் தொடுத்தார்.
🤔 அதற்கு மகாராணியும் “ஏன்? இவ்விதம் நீங்கள் உரையாடுகிறீர்கள்… நான் எப்பொழுதும் போலவே தான் உள்ளேன். இதற்கு என்ன பெரிய மனம் உள்ளது?” என்று அமைச்சரிடம் கூறினார்.
📢 அமைச்சரும் இரண்டாவது அம்பைத் தொடுக்க தொடங்கினார். “ஈன்ற மகன் இடத்தில், வனத்தில் கண்டெடுத்த மகனை இளவரசனாகவும், அரசருக்கு பின் அரசாளும் அரசுரிமையையும் அளிக்கும் தாங்கள் எவ்வளவு பெரிய மனதை கொண்டிருப்பீர்கள் என்று புலப்படவில்லையா?” என்று தனது உரையை முடித்தார்.
😟 அமைச்சரின் இந்த பதிலானது மகாராணியின் மனதில் ஒருவிதமான சஞ்சலத்தை உருவாக்கியது. 💭 அதாவது தான் ஈன்ற மகன் இருக்கும் பொழுது, மகாராஜாவுக்கு பின் தன் மகனே நாடாள வேண்டும் என்ற எண்ணம் மகாராணிக்கு உதயமாயிற்று.
👑 ஒருவேளை மணிகண்டன் நாடாளும் பட்சத்தில் நம் நாட்டிலுள்ள பிரதிநிதிகள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தொடங்கினாள்.
🪔 அதாவது ஈன்ற மகனுக்கு உண்டான அனைத்து உரிமைகளையும் வனத்தில் இருந்து கண்டெடுத்த மகனுக்காக தன் மகன் அனுபவிக்க வேண்டிய உரிமைகளை கொடுத்துவிட்டால்… என்று பேசத் தொடங்கி விடுவார்களோ என்று அவள் மனதில் பலவிதமான குழப்பங்களுடன் அமைச்சர் கூறிய பதிலும் ஒருவிதமான சங்கடத்தையும் உருவாக்கியது.
🐜⛰️ எறும்பு ஊற, பாறையும் கரையும் என்பது போல தனது நஞ்சான சொற்களின் மூலம் நல்மனம் கொண்ட மகாராணியின் மனதில் தீய எண்ணங்களை விதைத்து அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வகையிலும் மாற்றிக்கொண்டார் அமைச்சர். அதாவது மகாராணியின் மூலம் தனது சதித்திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார்.
🪶 தங்களுக்கு பிறந்த மகனே மகாராஜாவுக்கு, பின்பு அரியணை ஏற வேண்டுமே தவிர வனத்தில் இருந்து எடுத்து வந்த குழந்தை அரியணை ஏறுவது என்பது சரியானதாக தோன்றவில்லையே… என்று மகாராணியின் மனதில் மணிகண்டனை பற்றிய எண்ணங்களையும், அவனால் உண்டாகும் விபரீதங்களை பற்றியும் கொஞ்சம்… கொஞ்சமாக… எடுத்துரைத்து அதுவரை அன்பு கொண்ட மனதில் மணிகண்டன் என்றாலே வெறுக்கும் நிலைக்கு மாற்றிவிட்டார் முதலமைச்சர்.
🤔 அச்சமயத்தில் மணிகண்டன் அவ்விடம் வர அதுவரை அன்புடன் பார்த்து வந்த அன்னையின் கண்களில் மணிகண்டன் தனது மகனின் உரிமையைப் பறித்துச் செல்லும் ஒருவராகவே தெரிந்தான்.
🏰 அரண்மனையில் மகாராஜாவும், மற்ற அமைச்சர்களுடன் தனக்கு அடுத்து யார் இப்பகுதியை ஆளப்போகின்றார்கள் என்பதை அறிவிக்கும் பொருட்டு அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அந்த ஆலோசனையில் மணிகண்டன் தனக்குப்பின் அரசாள வேண்டும் என்பதே மன்னனின் ஆழ்ந்த விருப்பமாக இருந்தது.
📜 மகாராஜாவும், மணிகண்டன் வருகைக்குப்பின் மணிகண்டனை இளவரசனாக அறிவித்து முடிச்சூட்ட வேண்டும் என்று தனது அமைச்சர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதை கேட்ட மகாராணி தன் கண்களால் கண்டு, செவிகளால் கேட்டு மிகுந்த கோபமும், ஆவேசமும் கொண்டார்.