திருகோணமலை காட்டுப்பகுதிக்குள் அநாதரவான நிலையில் அரிய வகை வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாயை விட்டு அநாதரவான நிலையில் இருந்த மரையொன்றினை மீட்டு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுண்ணக்காடு காட்டுப் பகுதியில் விறகு எடுக்க சென்ற இராணுவத்தினர் இதனை ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட மரை ஈன்று ஒரு மாத காலமாக இருக்கலாம் எனவும் 3 அடி உயரமானதுடன் தொப்புளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை நிறத்தை கொண்ட மரையொன்று ஏற்கனவே சிங்கராஜா காட்டுப்பகுதிக்குள் மீட்கப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரையை கிரிதல மிருக வைத்தியரிடம் கொண்டு செல்ல உள்ளதாக கந்தளாய் வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.