சிறுகதை சிறுவர் பக்கம்

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று தெரியாமல், மாலதி என்ற பெண் அவனது அழகில் மயங்கி அவனை திருமணம் செய்தாள். அவனின் முட்டாள்தனத்தால் ஏராளமான தொல்லைகளையும் அனுபவித்தாள். எப்படியாவது அவனை திருத்த வேண்டும் என்று மனதிற்குள் எண்ணினாள் மாலதி.

அந்த ஊருக்கு புகழ்பெற்ற நாடகக் குழு ஒன்று வந்தது. அவர்கள், ராமாயண நாடகம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அந்த நாடகத்தை பார்த்து கணவன் திருத்துவான் என நினைத்தாள். அதனால், அவனை நாடகம் பார்க்க அனுப்பி வைத்தாள். அவன் அங்கு சென்று ஒரு மூலையில் படுத்து தூங்கினான். கூடியிருந்த கூட்டத்திற்கு, பணக்காரர் ஒருவர் இனிப்புகளை கொடுத்தார். நன்றாக தூங்கி கொண்டிருந்த பரத்தின் வாயில், இனிப்பை போட்டார். அதை சுவைத்து சாப்பிட்டான் பரத்.

மறுநாள் காலையில், வீட்டிற்கு திரும்பினான் பரத். ‘நாடகம் எப்படி இருந்தது?” என்று கேட்டாள் மாலதி. ‘நாடகம் ரொம்ப இனிப்பா இருந்தது” என்றான் பரத். அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டு என்ன நடந்தது என்று விசாரித்தாள். அவனும் உண்மையை கூறினான். ‘இந்த முட்டாளை எப்போதும் திருத்த முடியாது” என்பதை உணர்ந்தாள் மாலதி.

கதையின் கருத்து : அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

Foolish Girl!

Bharat lived in a town. He was beautiful. But he′s stupid. He doesn′t do any work properly. Without knowing him, A woman named Malathi fell in his beauty and married him. She suffered a great deal of harassment because of his stupidity. Malathi thought that she should somehow correct him.

A famous drama group came to the town. They had announced that they would play the Ramayana drama. She thought her husband would changed by seeing the drama. So she sent him to see the drama. He went there and slept in a corner. To the assembled crowd, a rich man gave sweets. He put the sweet in the mouth of the Barath who slept well. Bharat tasted it.

The next morning, Bharat returned home. “How was the drama?”, Malathi asked. “The drama was so sweet,” said Bharat. She was suspicious and inquired what had happened. He also told the truth. Malathi realizes that “This stupid can never be corrected”.

Moral of the story : Give important to knowledge, not on beauty.

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர்...
Thamil Paarvai

Leave a Comment