
அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். இப்போது அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
அவல் மாவு – 1 கப்
பால் – 500 மி.லி
பாதாம் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – தேவைக்கு ஏற்ப
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:-
👉 முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
👉 பிறகு பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
👉 பின்பு பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
👉 பிறகு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.
👉 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் அவல் பால் கொழுக்கட்டை தயார்.