இன்று பலரும் முகத்தை எப்பொழுதும் அழகாக வைத்துக்கொள்வதற்காக பலவகை அழகுச்சாதனப் பொருட்களை தேடி வாங்குகிறார்கள். இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.
👧 செயற்கையான அழகுச்சாதனப் பொருட்களை உபயோகிக்காமல், இயற்கையானப் பொருட்களை வைத்தே உங்கள் முகத்தை அழகாக்கிக் கொள்ளலாம். அதைப் பற்றி இங்கு காண்போம்.

👧 கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சைச்சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் மிருதுவாகும்.
👧 பாதியாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் 5 ஸ்ட்ராபெர்ரியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.
👧 கருவளையத்தைப் போக்க பூசணி சிறந்த மருந்தாகும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைத்தால் கண்களைச்சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
👧 ஒரு கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் தடவி வந்தால், பருக்கள் மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.

👧 முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் மிருதுவாக மாறும்.
👧 வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலை மாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
👧 சின்னம்மையால் ஏற்பட்ட வடுவைப் போக்க தேங்காய் தண்ணீர் பயன்படுகிறது. தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வந்தால் சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
👧 பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.