ஒன்ராறியோவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸாக பெற்றுக்கொண்டவர்கள் மாடர்னா அல்லது பைசர் நிறுவன தடுப்பூசிகளை இரண்டாவது டோஸாக பதிவு செய்யலாம்.
ஒன்ராறியோவில் 12 வாரங்களுக்கு முன்னர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்கள் இன்று முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இரண்டாவது டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.