
😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின் அடியில் தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் இரவு நேரங்களில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு என்ன காரணம்? என்று நாம் பெரியவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்கள் அவ்வாறு சொல்வதற்கு என்ன காரணம்? என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
😴 மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் வாயு அவசியம் தேவை. ஆக்சிஜன் இல்லையெனில் நம்மால் மூச்சுவிட முடியாது. நாம் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகின்றோம்.

😴 மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி ஆக்ஸிஜன் அவசியமோ, அதேபோல் மரங்களும் தன்னை பாதுகாத்து கொள்ள சூரிய ஒளி, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு மிகவும் அவசியம். எனவே, இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு, மரமானது ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
😴 மரங்கள் விடும் ஆக்ஸிஜனை தான் நாம் சுவாசிக்கின்றோம். நாம் சுத்தமான காற்றை உள்வாங்கி, அசுத்த காற்றை வெளியிடுகின்றோம். ஆனால் மரங்கள் அசுத்த காற்றை உள்வாங்கி சுத்தமான காற்றை நமக்கு தருகிறது.
😴 மரங்கள் இரண்டு விதமாக சுவாசிக்கிறது… பகலில் அசுத்த காற்றான கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதேபோல இரவில் ஆக்ஸிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.

😴 எனவே, இத்தகைய சூழ்நிலையில் நாம் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் படுத்து உறங்கும் போது, நமக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காது. அந்த நேரத்தில் மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை நாம் சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
😴 இதன் காரணமாகத் தான் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு தூங்குவதை தவிர்ப்பதற்காகவே, நம்பாத சிலருக்காக மரத்தில் பேய் இருக்கிறது என்று பெரியவர்கள் சொன்னார்கள்.