
இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது இன்று வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின்னர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது.