சிறுகதை சிறுவர் பக்கம்

இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா எதற்காக..?

ஒருவன் தன் தோட்டத்தில் இருந்து, நன்கு விளைந்திருந்த காய்கறிகளை மார்க்கெட்டில் கொண்டுபோய் விற்க புறப்பட்டான். அதனால் காய்கறிகளை தன் வண்டியில் கட்டிக் கொண்டு போனான். அவ்வாறு போகும் போது, வழியில் அவனது வண்டியின் சக்கரம் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு, காய்கறிகள் கீழே விழுந்துவிட்டன. அப்போது அவன் கடவுளே எனக்கு உதவி செய் என்று வேண்டினான். இப்போது கடவுள் வரவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தான், இருப்பினும் வரவில்லை. அருகில் யாரும் இல்லை.

ஆகவே அவனே அந்த வண்டிச் சக்கரத்தை தூக்கி மேட்டில் வைத்தான். இப்போது சுலபமாக அவனால் தூக்க முடிந்தது. அந்த நேரத்தில் அவன் ‘தன்னால் தூக்க முடியாது என்று நினைத்த வண்டியின் சக்கரத்தை தூக்கிவிட்டேனே!” என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டான். ஆனால் பின்னால் பார்த்தால், அந்த வழியில் வந்த ஒரு துறவி அவனுக்கு உதவினார். அந்த துறவிக்கு அவன் தன் நன்றியைக் கூறி, ‘அத்தனை முறை கடவுளை அழைத்தும், அவர் வந்து உதவவில்லை, ஆனால் நீங்கள் வந்து எனக்கு உதவியதற்கு மிகவும் நன்றி” என்று கூறினான்.

அப்போது அந்த துறவி, ‘எதற்கு கடவுள் மீது கோபம் கொள்கிறாய்? அவர் உனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்லாதே, நீ ஏதேனும் முயற்சி செய்தால் தானே, அவரால் உனக்கு உதவ முடியும்” என்று சொன்னார். பின் ‘நீ முயற்சி செய்ததால் தானே, நானே வந்து உதவினேன். ஆகவே அவர் உனக்கு உதவ வேண்டும் என்றால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடு” என்று கூறி சென்று விட்டார்.

Nothing happens without effort…!!

One who took the well-grown vegetables from his garden and gone to the market to sell the vegetables. So he packed the vegetables in his cart and left. On the way, the wheel of his cart got stuck in a ditch and the vegetables fell down. Then he prayed to God to help him. Now God has not come. He called again and again, but God did not come. No one was nearby.

So he lifted the wheel and put it on the mound. Now he could able to took easily. At that moment he thought “I lifted the wheel of the cart thinking I could not lift by myself!” wondered at that thought in his mind. But looking back, a monk who came on that way helped him. He thanked the monk and said, “I have called on God so many times but he did not come and help me, but you came and help me thank you so much for that.”

Then the monk said, “Why are you angry with God? Do not say that God did not help you, only if you try something, God can help you.” Then the monk said, “Because you tried yourself, I came and helped you. So, if God wants to help you, give him a chance too.”

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

Leave a Comment