சிறுகதை சிறுவர் பக்கம்

இவருக்கு இருந்தாலும் இவ்வளவு கர்வம் இருக்கக்கூடாது.

ஒரு கிராமத்தில் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவராக இருந்தார். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர் பாடசாலை மிகவும் சிறியதாக இருந்ததால், அவருக்கு பெரிய பாடசாலை தேவைப்பட்டது. அப்போது ஒரு பணக்கார வியாபாரி, குருவின் பாடசாலையை பெரிதாக கட்டுவதற்கு தன்னிடம் இருந்து, பத்தாயிரம் ரூபாயைக் கொடுக்க முன்வந்தார்.

அதை குருவும் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதைப் பெற்றுக் கொண்டப் பின் குரு எதுவும் சொல்லாமல், உள்ளே சென்று விட்டார். ஆனால் அந்த பணக்காரர் தன் மனதில் ‘குருவுக்கு அவ்வளவு பணம் கொடுத்தும், அவர் ஒரு நன்றி கூட சொல்லவில்லையே” என்று வருத்தப்பட்டார். அதனால் தன் மனதில் இருப்பதை அவருக்கு வெளிப்படுத்த, மறைமுகமாக, ‘நான் உங்களுக்கு அந்த மூட்டையில் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளேன்” என்று மறுமுறையும் கூறினார்.

குருவும் ‘நீங்கள் அதை ஏற்கனவே சொல்லிவிட்டீர்” என்று கூறினார். இல்லை, நான் ஒரு பெரிய பணக்கார வியாபாரி தான் என்றாலும், பத்தாயிரம் ரூபாய் என்பது பெரிய பணம் அல்லவா ‘என்று கூறினார். அதற்கு குரு” எனவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? என்று கேட்டார். அந்த பணக்காரரும் ‘ஆம், சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

குரு அதற்கு அவரிடம், ‘நான் ஏன் சொல்ல வேண்டும். கொடுத்தவர் தான் நன்றியுடன் இருக்க வேண்டும்.” என்று கூறி, உண்மையில் ‘தானம் செய்பவர் எதையும் எதிர்பார்க்கக்கூடாது, அவருக்கு தானமே பெரும் மகிழ்ச்சியைத் தரும்” என்று கூறினார்.

The Donation…!!

A guru was lived in a village. He was excellent at teaching the lesson. So a lot of students gathered in a school. But he needed a bigger school because the school was so small. Then a rich merchant offered to pay ten thousand rupees to build a large school for the Guru.

The Guru also accepted it. But after receiving the money, the Guru went inside without saying anything. But the rich man regretted in his mind that “giving so much money to the Guru, he did not even say a thank you”. So in his mind he want to make him recognize, so he implicitly said, “I have given you ten thousand rupees in that bundle.”

The Guru also said, “You have already said that.” No, even though I am a very rich merchant, ten thousand rupees is a big money. The Guru asked, “So do you want to say thank you?”. The rich man said, “Yes, you have to say”.

The Guru said to him, “Why should I say that. The one who gave should be thankful.” In fact, he said, “The donor should not expect anything, and the donation itself will bring great happiness.”

Recent posts

உண்மையில் ரொம்ப பாசம் இவருக்கு..

இருநூறு மைல் தொலைவில் வசித்து வந்த தனது தாய்க்கு ஒரு ரோஜா வாங்க ஒரு நபர் பூக்கடையில் தனது மகிழுந்துவை நிறுத்தினார். அவர் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கும்போது...
Thamil Paarvai

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக...
Thamil Paarvai

கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாமே…

ஒரு பெண்ணிடம் ஒரு செல்ல நாய் இருந்தது. அது அவளுக்கு மிகவும் உண்மையாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையை நாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு, அவள் சந்தைக்குச்...
Thamil Paarvai

ஆஹா.. தந்தையை மாற்றிய மகள்..

ராம் என்ற ஏழை ஒருவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகள் மட்டும் இருந்தனர். மகள் தனது தந்தைக்கு கிறிஸ்துமஸ் நாளன்று...
Thamil Paarvai

அவர்களின் முட்டாள்தனத்துக்கு அளவே இல்லாம போச்சு..

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே அவர்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது...
Thamil Paarvai

இது தெரிந்தால் நீங்களும் சிறந்தவர்கள் ஆகலாம்..

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்துவிட்டு, சாலையில் வந்து கொண்டிருந்தது. ஒரு சிறிய பாலத்தில் யானை வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே...
Thamil Paarvai

அவர் திருந்தினாரா?? இல்லையா??

பரத் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் அழகாக இருந்தான். ஆனால் அவன் ஒரு முட்டாள். எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய மாட்டான். அவன் முட்டாள் என்று...
Thamil Paarvai

என்ன ஒரு அருமையான யோசனை பாருங்களேன்

மீத்து ஒரு அழகான பச்சை கிளி. ஒவ்வொரு நாளும் அது காலையில் உணவைத் தேடி புறப்பட்டு விடும், மாலையில் திரும்பி வந்து தனது கூட்டில் ஓய்வெடுக்கும். ஒரு...
Thamil Paarvai

புதையல் இரகசியம்….

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒருநாள் அவர், தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார்....
Thamil Paarvai

Leave a Comment