Featured Uncategorized கிரிக்கெட் செய்திகள் புதிய செய்திகள் விளையாட்டு

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் மோதியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த அந்த முடிவு.. தோல்விக்கு காரணமே அதுதான்.. மொத்தமாக காலி செய்து விட்டது இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் 4 ரன்களில் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 81 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து விராட் கோலி ராகுலும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் விராட் கோலி 54 ரன்களில் போல்டாக இந்தியா சரிவை நோக்கி சென்றது. ராகுல் 66 ரன்களும் சூரியகுமார் யாதவ் 18 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை அடுத்து 241 ரன்கக் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலே பவுண்டரிகளை விளாசி 15 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை பெற்றது.

எனினும் டேவிட் வார்னரின் விக்கெட்டை முகமது சமி வீழ்த்த இந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்தது. தொடக்கத்தில் இருந்தே கெட்ட சகுனம்.. சிறப்பாக ஆடியும் இந்தியாவிற்கு எதிராக போன லக்.. இதுதான் சிக்கலே!

இதைப் போன்று மிச்சல் மார்ஸ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 47 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஆனால் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹேட் இந்தியாவின் கனவுக்கு வேட்டு வைத்தார். மார்னஸ் லாபஸ்சேனுடன் ஜோடி சேர்ந்த அவர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் பனிப்பொழிவு ஏற்பட பந்து நன்றாக பேட்டிற்கு வர தொடங்கியது. இதனை அடுத்து டிராவிஸ் ஹேட் அதிரடி காட்ட 95 பந்துகளில் சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் வெற்றி இலக்கை 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.இதன் மூலம் உலகக்கோப்பை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

Recent posts

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

இனிய புது வருட வாழ்த்துக்கள்.

தமிழ்ப்பார்வை சஞ்சிகையின் எழுத்தாளர்கள்,வாசகர்கள்,விளம்பரதாரர்கள், மற்றும் நலன்விரும்பிகள்அனைவருக்கும் தமிழ்ப் பார்வையின் இனியபுது வருட வாழ்த்துக்கள்.
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

Leave a Comment