📰 பத்திரிக்கை உலக ஜாம்பவான் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான ஏ.என்.சிவராமன் 1904ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார்.

📰 இவர் கல்லூரியில் படிக்கும்போது ஒத்துழையாமை இயக்கத்திற்காக காந்திஜி அழைத்தார். எனவே படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
📰 காந்திஜியின் ‘ஹரிஜன்” இதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். 1934ஆம் ஆண்டு ‘தினமணி” இதழ் தொடங்கப்பட்டபோது, இவர் உதவி ஆசிரியராக பணியாற்றினர்.
📰 கணக்கன், ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி, குமாஸ்தா, அரைகுறை வேதியன், அரைகுறை பாமரன் ஆகிய புனைப்பெயர்களில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதினார்.
📰 பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டயத்தை ஏற்றார்.
📰 தமிழ் பத்திரிக்கை உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், ‘ஏஎன்எஸ்” என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான ஏ.என்.சிவராமன் தனது பிறந்தநாளன்றே 2001ஆம் ஆண்டு மறைந்தார்.