ரஜினியின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், நேற்றைய தினம் எடுத்த முக்கியமான முடிவுதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாகியிருக்கிறது. உதவி இயக்குனர், கவிஞர், பாடகர், பரதநாட்டிய கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஐஸ்வர்யா, முதல் முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி இருக்கிறார்.
அதற்காக, அவரது நட்பு வட்டங்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் பலரும் ஐஸ்வர்யா தனுஷுக்கு வாழ்த்தும், வரவேற்பும் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.
ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷோ, ஒரு படி மேலே போய் ‘என் மனைவி இன்ஸ்டாகிராம் வந்திட்டாங்க, இனிமேல் டிஜிட்டல் பன் தான்’ என்று ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை எடுத்து, ஷேர் பண்ணி டுவீட் பண்ணியிருக்கிறார். அவருக்கும், கமெண்ட் எகிறிக் கொண்டிருக்கிறது.