கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பழங்குடி சிறுவர்களுக்கான கத்தோலிக்க வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த பகுதியில் 751 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையில் மே மாத இறுதியில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நூற்றுக்கணக்கான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பூர்வகுடியைச் சேர்ந்த கொவேசஸ் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் முன்னொரு காலத்தில்கனடாவின் மிகப்பெரிய பாடசாலையாக விளங்கிய கம்லூப்ஸ் இந்தியன் பாடசாலை விடுதிவளாகத்தில் மூன்று வயது குழந்தைகள்முதல் பல்வேறு வயதுகளில்உள்ள 215 சிறுவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.