Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனடா அரசு அதிரடி நடவடிக்கை ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் பயணிகள்…

கனடாவுக்கு வரும் பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை நாளை முதல் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது.

கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பயணிகள் கொரோனா சோதனைக்கு உட்பட மறுத்தாலோ, ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்தாலோ, அவர்களுக்கு தற்போது 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை முதல் அந்த அபராதத்தொகை 2,000 டொலர்கள் உயர்ந்து, 5,000 டொலர்களாக ஆக்கப்பட இருக்கிறது.

கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் அனைத்துப் பயணிகளும் கனடாவுக்குள் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும், 14 நாட்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலையில், கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் அரசு நியமித்துள்ள ஹொட்டல் ஒன்றில் மூன்று நாட்களுக்கு அவர்கள் தங்கவேண்டும் என்றும், அதற்கான கட்டணமான 2,000 டொலர்களை தாங்களே செலுத்தவேண்டும் என்றும் பிப்ரவரி 22ஆம் திகதி கனடா அரசு அறிவித்தது.

அத்துடன், கனடாவுக்கு வருவதற்கு முன்பும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால், பல பயணிகள், 3,000 டொலர்கள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு ஹொட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்தாமலே சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, இந்த ஹொட்டல் தனிமைப்படுத்தலே தேவையில்லை என்றும், மக்களே தங்கள் தனிமைப்படுத்துதலை ஏற்பாடு செய்துகொள்ளட்டும் என்றும் அரசின் ஆலோசனைக் குழு பிரச்சினை எழுப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

ஏப்ரல் 14க்கும் மே 24க்கும் இடையில் மட்டும், 1,000க்கும் அதிகமான பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்ததால் அபராதம் செலுத்தியுள்ளார்கள். 400க்கும் அதிகமான பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன்னும், விமான நிலையம் வந்த உடனும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாததற்காக அபராதம் செலுத்தியுள்ளார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment