Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

கனேடிய பிரதமர் தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவு!

தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)உத்தரவிட்டுள்ளார்.

பல நாட்கள் அழுத்தத்திற்குப் பின்னர், ஒட்டாவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

கனடாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிசு கொலம்பியா இந்த வாரம் 215 குழந்தைகளின் எச்சங்கள் பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பழங்குடி சமூகத் தலைவர்கள் உட்பட பலரும் கனடா முழுவதும் கொடிகளைக் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவினை ஞாயிற்றுக்கிழமை ஜஸ்டின் ட்ரூடோ, தனது டுவிட்டர் பதிவில் இதனை அறிவித்தார்.

“கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி எனப்படும் மிகப்பெரிய பழங்குடியின குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிந்த சடலங்கள் பழங்குடி மக்களுடைய சடலங்கள் தான்” என Tk’emlúps te Secwépemc பழங்குடியினர் தலைவர் ரொசன்னா கசிமிர் (Rosanne Casimir) உறுதிபடுத்தியுள்ளார். தரைக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் உடல்களை கண்டுபிடித்த அவர், இன்னும் தளத்தில் தேடல் முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கசிமிர் (Rosanne Casimir) மேலும் கூறுகையில் , “கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் 2015 ஆம் ஆண்டு அறிக்கை படி, கனடாவின் பழங்குடியினர் அனைவரையும் மத மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற குடியிருப்பு பள்ளிகளுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுள் 6,000 க்கும் மேற்பட்டோர் கலாசார இன படுகொலை செய்யப்பட்டனர்.

இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை. முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை கூற இயலாது. 1890 முதல் 1978 வரை செயல்பட்ட இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்க கூடும்” என கூறப்படுகிறது. 1990 களில் தான் கனடாவில் இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டன என்றார்.

இந்நிலையில் இது தொடர்பில் கனட சட்டமன்ற தலைவர் பெர்ரி பெல்லக்ராட் (Perry Bellegarde), “பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் ரத்தத்தினை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றதாக அவர் கூறினார்.

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

இலங்கை மூத்த அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. இரா. சம்பந்தன்...
Thamil Paarvai

தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ...
Thamil Paarvai

நெகிழவைக்கும்செயல்! கண்ணீர்விட்டுகதறியபெண்கள்.

ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு...
Thamil Paarvai

சூரிய கிரகணத்திற்காக அவசரகாலநிலை பிரகடனம்

கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்...
Thamil Paarvai

பயணத்தின் தொடக்கம். முயற்சிகள் தோல்வியுற்றன.

அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர்...
Thamil Paarvai

ஏப்ரல் 2024-இல் வரவிருக்கும் ஸ்மார்ட் போன்கள்.

இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை...
Thamil Paarvai

புவி வெப்பமயமாதலால் ஏற்படப்போகும் மாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால் பூமியின் நேரத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலையில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின்...
Thamil Paarvai

அற்புதமான தலைவருக்கு நாம் மரியாதையோடு ‘பிரியாவிடை’ கொடுப்போம் .

வியாழக்கிழமை பெப்ரவரி 29ம் திகதி கனடாவில் எம் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு பிரதமராக விளங்கிய பிரைன் மல்ரோனி அவர்கள் தனது 84 வயதில் காலமானார்....
Thamil Paarvai

Leave a Comment